Header Ads Widget

Responsive Advertisement

நிந்தைகளும் போராட்டங்களும்[1]

நிந்தைகளும் போராட்டங்களும் [1]

புனித தோமா சென்னை பகுதியில் ஊழியஞ் செய்யும் போது தனது இரண்டாண்டு அனுபவத்தில் ஒவ்வொரு நளும் ஒரு பகுதியில் அன்று இரவு தங்கிவிடுவார். அவரது வார்த்தைக்கு செவிசாய்க்காத எதிரிகளிடமிருந்து அவர் கிட்டத்தட்ட 30 முறை உயிர்தப்பியுள்ளார் என்று சான்றுகள் கூறுகின்றன. அனேக ஜனங்களால் தூஷணமான வார்த்தைகளை கேட்க சகிக்காமல், ஏதாவது ஒரு திசையில் அவர் மாட்டி கொள்ளும் போது, இரவு சற்று நேரம் தலைசாய்ப்பதற்காக பல இடங்களை தேர்ந்தெடுப்பார். ஆனாலும் அங்கு கொடிய மக்களினால் போராட்டம் காணப்பட்டு அவமானங்களுக்குள்ளாகி விடுவார். இதனால் இரவு நேரங்களில் நடந்து கொண்டே அவர் அந்த ஜனங்களுக்காக வேண்டுதல் செய்த நாட்கள் அதிகம். கிபி 13ம் நூற்றாண்டில் கல்வெட்டு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட போது சுமார் 13000 மக்கள் வசிக்கின்ற இடத்தில் புனித தோமா வாசகம் அடங்கிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சுமார் 33 இரவுகள் அவர் அயராமல் இராமுழுவதும் வேண்டுதல் செய்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இவர் இரண்டு வருட ஊழியத்தில் சந்தித்த நிந்தைகள், போராட்டம் இவற்றையெல்லாம் இன்னும் நமக்கு கிடைக்காத சான்றுகளை நாம் கிடைக்க பெற்றோமாகில் நம்மால் அதை மேற்கொள்ளவே முடியாது. மனதில் தாங்கி கொள்ளவும் முடியாது.

Post a Comment

0 Comments