நிந்தைகளும் போராட்டங்களும்
கிழக்கு வங்காள தேசத்தில் கல்கத்தா என்று அழைக்கப்படும் இடத்தில் அவர் ஊழியம் செய்யும் போது சில எதிரிகளால் அவர் தாக்கப்பட்டார். இருப்பினும் அவர் சரீரத்தில் ஒரு காயமும் ஏற்படவில்லை. அவர் இரவு பகலாக பிரயாணப்பட்டு மீண்டுமாக தனது பழைய சீஷர்களிடத்திற்கு புறப்பட்டு போய் கேரளா மானிலத்தை அடைந்தார். அங்கு அவர் சுமார் 7 மாதங்கள் தங்கி அனேக நாள் உபவாசம் எடுத்து ஜெபித்ததன் மூலம், இன்றைக்கு தமிழகம் என்று அழைக்கப்படும் சென்னை மானிலத்தை வந்தடைந்தார். ஆனால் இன்று சென்னை ஒரு பெரு நகர் என்று அழைக்கப்படுகின்றது. அவர் முதன்முதலில் சென்னையை வந்த அடைந்தவுடன் அவரை திரளான ஜனங்கள் வரவேற்ற போதிலும் அவர்கள் பாமர மக்களும் ஊனமுற்ற மக்களுமே அவர் கண் முன் காட்சியளித்தனர். குறிப்பாக ஒரு விசேஷித்த சம்பவத்தை பார்ப்போமானல் கேரளாவுக்கும் சென்னைக்கும் இடையில் அவர் வழிப்பிரயானத்தின் போது ஒரு பிறவி குருடன் அவரிடத்தில் வந்தபோது தன்ணுடைய குதிரை வாகன வண்டியை நிறுத்திவுட்டு இயேசுவின் நமத்தினால் அவருக்கு சுகம் கொடுத்தாரம். அந்த குருடர் சுகம் பெற்றவுடனே சென்று நேராக தமிழகத்தின் தென் படுதியான கன்னியாக்குமரியை சென்றடைந்தாராம். இன்றைக்கும் கன்னியாகுமரியில் உள்ள பிரசித்திப்பெற்ற ரோமன் கத்தோலிக்க திருச்சபை இப்படிப்பட்ட சாட்சியை விளக்குகிறது. புனித தோமா சென்னையில் மட்டும் தங்கி ஊழியம் செய்த காலங்கள் சுமார் நான்கு வருடங்கள் மட்டுமே.இன்றைக்கு சென்னையில் பரங்கிமலை என்று அழைக்கப்படும் மலைக்குன்று தான் அன்று புனித தோமாவின் ஜெப பீடமாகும்
0 Comments