புனித தோமாவின் நோக்கம்
கிபி. 38ம் வருடம் தோமா இந்தியாவில் கால் வைத்த உடனேயே ஊழியத்தினிமித்தம் சில திட்டங்களை வகுத்து கொண்டார். முதலில் அவர் கேரள மானிலத்தில் அடியெடுத்து வைத்தவுடன் வியாதிப்பட்ட மக்களும், ஊனமுடைய மக்களும் அவர் கண்முன் தோன்றினர். ஊழிய பாதையில் அடியெடுத்து வைக்கும் போது அற்புதமே முதல் அடிப்படை என்ற நோக்கத்துடன் ஊழியத்தில் செயல்பட துவங்கினார். அன்றைய நாட்களில் இயேசுவின் அற்புதத்தின் மூலம் புனித தோமாவின் வார்த்தையை கேட்க மக்கள் கூடினர். திக்கு தெரியாத காட்டில் தனிமையில் காலடிவைத்த புனித தோமா தனக்குள் அனேக சீஷர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலில் 20 சீஷர்களை உருவாக்க ஆரம்பித்தார். அந்நாட்களில் ஊழிய குழுவாக இருந்தாலும் சரி உலக அரசாட்சியாக இருந்தாலும் சரி ஒரு அவையில் 20 பேர் கொண்ட குழு அவைத்து கொள்வர். இந்த நோக்கத்துடன் அவர் இந்தியாவில் ஊழிய பணியை துவங்க ஆரம்பித்தார்.
இயேசு கிறிஸ்துவின் ஊழியப்பாதை முற்றிலும் பின்பற்றிய புனித தோமா இந்தியாவில் காலடி வைப்பதற்கு முன் நான்கு வருட பாலஸ்தீன தேச ஊழியத்தில் அவர் அதிகம் கண்டது அற்புதத்தின் மூலம் இரட்சிப்புக்குள் வழி நடத்துப்படுவாராம். அதே நோக்கமே இந்தியாவிலும் இருந்தது.
0 Comments