Header Ads Widget

Responsive Advertisement

இந்தியாவில் பன்னிரண்டு வருட ஊழியம்


இந்தியாவில் பன்னிரண்டு வருட ஊழியம்

கிபி.38ம் வருடம் புனித தோமா இந்தியாவில் தென்முனையாகிய கேரளா வழியாக உட்பிரவேசித்த போது அன்றைய தினம் மக்கள் ஆண்டவராகிய இயேசுவை பற்றி அறியாமலிருந்தாலும், ஏதோ ஒரு வெளி நாட்டு கடவுள் வருகிறார் என்று அவரை பலவிதமாக பேசினார்கள். கேரளாவின் வடமுனை பகுதியில் அன்று இந்த “காரில்” என்ற மலை குன்றின் மேல் அமர்ந்து கொண்டு அவர் பிரசங்கிக்க தொடங்கினார். அவர் பிரசங்கத்தை கேட்டு மனம் திரும்பிய திரு.மாஸ் என்ற சகோதரர் தோமா செய்து வரும் அற்புதங்களையும், அவருடைய நடபடிகளையும் “காரில்” மலை பாறைகளில் எழுத்து வடிவில் பொறிக்க தொடங்கினார். கேரள மானிலத்தில் அவருடைய வார்த்தையை கேளாத மக்கள் அவரை எதிர்த்து நின்றாலும் கர்த்தருடைய பிரசன்னம் அவரோடு இருந்ததினால் அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மூலை முடுக்குகளிலிருந்தும் அனேக ஊனமுற்றவர்கள் சுகத்தை பெற்றுகொள்ளும்படி அவரிடத்தில் கொண்டு வரப்பட்டார்கள். இதனால் திரளான அற்புதங்களை அவர் இயேசுவின் நாமத்தினால் நடப்பித்தார். சுமார் 3 ஆண்டுகளில் திருச்சபைகளை ஸ்தாபிக்க முடிந்தது. இந்திய மானிலமாகிய உத்திரபிரதேசத்திற்கு அவருக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. அவர் ஒரு நாள் கேரளாவில் உள்ள மலையின் மேல் ஜெபிக்கும் போது இந்தியாவின் வடபாகங்களை தேவன் தரிசனமாக காட்டினார். ஒரு நாள் தனக்கென்று ஏற்படுத்தப்பட்ட சீடர்கள் 17 பேர்களுடன் தான் கண்ட தரிசனத்தை குறித்து பேசும் போது தூயமரிய ஜோசப் என்ற போதகர் புனித தோமா செய்த அற்புத அடையாளங்களை விவரிக்கும் திருச்சபை ஒன்றை நிறுவ திட்டம் வகுத்தார். தோமா வடமானிலத்திற்க்கு ஊழியங்களுக்கு வந்த பிறகு திருவனந்தபுரம் என்ற இடத்தில் ஒரு தேவலாயத்தை எழுப்பினார்கள்.

அவர் தொடர்ந்து வடமானில ஊழியஙகளுக்கு செல்லும் போது இயேசு கிறிஸ்துவை அன்று எப்படி திரளான ஜனங்கள் நெருக்கினார்களோ அதை போலவே அனேக ஜனங்கள் அற்புதம் வேண்டி அவரை நாடி சென்றனர். சென்னைக்கும், உத்திரபிரதேசத்திற்கும் அருகே உள்ள மன்சூரி என்ற மலை தொடருக்கும் இடை தூரத்தில் அவருடைய பிரயாண பாதியில் பார்க்கும் போது சுமார் 370 சரீர ஊனமுடைய மக்களுக்கு இயேசுவின் நாமத்தினால் சுகம் கொடுத்தாரென்று சொல்லி கிபி.1520 ல் வாழ்ந்த சூசையப்பர் என்ற போதகர் பல‌ ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்தார்.

Post a Comment

0 Comments