Header Ads Widget

Responsive Advertisement

18.பிலேயாமும் கடவுளுடைய வார்த்தையும்


பாலாக்
இஸ்ரவேலர்கள் தாம் பயனம் செய்த பாதையிலே கண்ட அனைத்து அரசுகளையும் வென்றார்கள் அப்படி வரும் வழியில் எமோரியரையும் வென்றார்கள். எமோரியருக்குச் செய்தவைகளை பாலாக் என்பவன் பார்த்து பயந்தான் அவன் மோவாப் நட்டிற்கு அரசனாய் இருந்தான்

பாலாக்கின் திட்டம்

பாலாக் தன் நாட்டின் மேல் இஸ்ரவேலர்கள் வெற்றி பெறாத படி, பலாக் தன் நாட்டில் வசித்த‌ பேயோரின் குமாரனாகிய பிலேயாம் என்ற கடவுளின் ஊழியக்காரனை அழைத்துவரும்படி, தன் வேலையாட்களை அனுப்பினான்.மேலும் பாலாக் இஸ்ரவேல் மக்கள் அவனது படையை விட பலசாலிகள் என்று அவன் அறிந்திருந்தான், பிலேயாம் என்ற கடவுளின் வேலைக்கரன் யாரை ஆசீர்வதிக்கிறானொ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவன் யாரை சபிக்கிறானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று அறிந்திருந்தான் ஆகையால் பீலேயாம் வந்து இஸ்ரவெலியரை சபிக்கவேண்டும்; அப்போது அவர்கள் பலம் போய்விடும் பிறகு அவர்களோடு நாம் போரிட்டால் எளிதாக வெற்றியடையலாம். என்று நினைத்ததால் அப்படி செய்தான்.

பிலேயாமிற்கு கடவுள் ஒப்புதல் தரவில்லை

அப்படியே மோவாபின் வேலைக்காரர்கள் பிலேயாமிடத்தில் போய், பாலாகின் திட்டத்தை அவனுக்குச் சொன்னார்கள்.அவன் இன்று இரவு தங்குங்கள் காலையில் கடவுள் என்ன உத்தரவு தருகிறாரோ அது படி செய்யலாம் என்று சொன்னான் காலையில் கடவுள் அவனுக்கு உத்தரவு தாராததால் பாலாகிடம் செல்ல மறுத்துவிட்டான்அப்படியே வேலைக்காரர்கள், பாலாகினிடத்தில் போய், பிலேயாம் எங்களோடே வரமாட்டேன் என்று சொன்னான் என்றார்கள்.

இரன்டாவது அழைப்பு
பாலாக் மறுபடியும் அவர்களிலும் கனவான்களான அதிக பிரபுக்களை அனுப்பினான். அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி, சிப்போரின் குமாரனாகிய பாலாக் எங்களை அனுப்பி, நீர் என்னிடத்தில் வருகிறதற்குத் தடைபடவேண்டாம்; உமக்கு மன்னன் அதிகமான ஊதியம் கொடுப்பான்; நீ வந்து நம் நாட்டிற்காக அந்த இஸ்ரவேல் மக்களை சபிக்கவேண்டும் என்று சொன்னார்கள் அதற்கு பிலேயாம் அவர்களிடம் பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரியகாரியமானாலும் செய்யும் பொருட்டு, என் கடவுளகிய எஜமானின் கட்டளையை நான் மீறக்கூடாது. எனவே கடவுள் சொல்வதைத்தான் நான் செய்வேன் என்று சொன்னான்

கடவுளின் கட்டளை
பின்பு பிலேயாம் கடவுளிடம் கேட்டான் அதற்கு கடவுள் அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ அவர்களோடே கூடப்போ; ஆனாலும் நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார். பிலேயாம் தன் கழுதையின்மேல் அமர்ந்து அவர்களோடே புறப்பட்டான்

கடவுளின் தூதன்
அவன் போகிற காரியததைக் குறித்து; எச்சரிக்கை செய்ய கடவுளின் தூதுவன் வழியிலே அவனுக்கு எதிரில் நின்றார். அவன் அவரை கவனிக்கவில்லை கடவுளின் தூதன் வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை மூன்று முறை அடித்தான்.கழுதை கடவுளுடைய தூதனைக் கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் மூண்டவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான்.


கழுதையின் வாய் திறக்கப்பட்டது

உடனே கடவுள் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து, நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது. அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து, நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால் இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான்.கழுதை பிலேயாமை நோக்கி, நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன், இல்லை என்றான்.

தூதனின் எச்சரிக்கை
உன்னோடே சொல்லும் வார்த்தையைமாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடே கூடப் போனான்.

இஸ்ரவேல் மக்களை வாழ்த்தினான்
பிலேயாம் பலாக் அரன்மனைக்குச் சென்று பாலாகுடனே கூடப் போனான்; அவனைப் பாலாக் பாகாலுடைய மேடுகளில் ஏறப்பண்ணினான்; அவ்விடத்திலிருந்து பிலேயாம் இஸ்ரவேல் மக்களைப் பார்த்தான் பிலேயாம் பாலாகை நோக்கி, நீர் இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் இங்கே எனக்கு ஆயத்தப்படுத்தும் என்றான். பிலேயாம் சொன்னபடியே பாலாக் செய்தான்; பின்பு பிலேயாம் பாலாகை நோக்கி, உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும், கடவுள் எனக்கு வெளிப்படுத்துவதை உமக்கு அறிவிப்பேன் என்று சொல்லி, ஒரு மேட்டின்மேல் ஏறினான். தேவன் பிலேயாமைச் சந்தித்தார்; கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளினார், பிலேயாம் பாலாகினிடத்தில் திரும்பிப்போய், கடவுள் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி? யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நான் அவர்களை ஆசீர்வதிப்பேனேயொழிய சபிக்க மாட்டேன் என்று சொன்னான் இதனால் பாலாக் வருத்தம் அடைந்தான். பின்பு பிலேயாம் பாலாக்கை நோக்கி கடவுள் சொல்லச்சொன்னதையே நான் சொன்னேன் என்று சொன்னான்.

பாலாக்கின் இரண்டாம் முயற்சி
பின்பு பாலாக் வேறொரு இடத்திற்கு பிலேயாமை அழைத்துச்சென்று அங்கே ஏழு தகனபலி செலுத்தி சபிக்க முடிகிறதா பாரும் என்று சொன்னான் அதற்கு பிலேயாம் கடவுள் மாற்றிப்பேசுகிறவரோ பொய் சொல்கிறவரோ இல்லை என்று பாலாகிற்கு மறுமொழி கூறி இப்போதும் கடவுள் என்னை இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிக்கவே சொல்கிறார் என்று சொன்னான்

மூன்றாம் முயற்சியிலும் தோல்வி
அப்போதும் திருப்ப்தியடையாத பாலாக் மீண்டும் வேரொரு இடத்திற்கு பிலேயாமை அழைத்துத் சென்று பலி செலுத்தி நீர் அவர்களை ஆசீர்வதிக்கவோ சபிக்கவோ வேண்டாம் என்று சொன்னான்

இஸ்ரவேல் மக்களைக்குறித்து பிலேயாமின் தரிசனம்

ஆனால் பிலேயாம் இஸ்ரவேல் மக்களைப்பார்த்து யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்! அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப் போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கடவுள் நட்ட சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு மர‌ங்களைப்போலவும் இருக்கிறது. அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும்; அவர்கள் ராஜ்யம் மேன்மையடையும். தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள். சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்;அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான்

Post a Comment

0 Comments