Header Ads Widget

Responsive Advertisement

21. மீதியானியர்கள் மற்றும் கிதியோன்


இஸ்ரவேலர்கள் அடிமையானார்கள்
இஸ்ரவேல் மக்கள் கடவுளின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கடவுள் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார். இதனால் இஸ்ரவேல் மக்கள் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள குகைகளில் தஞ்சமடைந்தனர். மீதியானியர்கள் பெரும் திரளாக வந்து இஸ்ரவேல் மக்களின் வயல்வெளிகளையும் கால் நடைகளையும் நாசம் செய்து கொன்டிருந்தனர். அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.அதற்கு கடவுள் நீங்களோ என் சொல்லைக் கேளாதே போனீர்கள் என்றார் பின்பு அவர்களுக்கு மணமிறங்கினார்.

கிதியோன்

மானாசேவின் வம்சத்தில் வந்த கிதியோனிடம் கடவுளின் தூதன்
பராக்கிரமசாலியே கடவுள் உன்னோடே இருக்கிறார். நீ போய் மீதியானியருக்கெதிராக போராடி இஸ்ரவேல் மக்களைக் காப்பாற்று என்று சொன்னார். அதற்கு கிதியோன் நான் எளியவன்; நான் எப்படி இதை செய்யமுடியும் என்று கேட்டான். நீ கடவுளின் துனையோடு இதைச்செய்வாய் என்றார். அப்போது கிதியோன் நீ கடவுளின் தூதுவன் என்று எப்படி நான் தெரி ந்த்து கொள்வது என்று கேட்டான்.அப்பொழுது கடவுளின் தூதன் அவனை நோக்கி, நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின் மேல் வைத்து ஆணத்தை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான். அப்பொழுது கடவுளின் தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது; துதன் மறைந்து போனார்.

அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்.

படையை தெரிந்தெடுத்தல்

அப்பொழுது கிதியோனும் அவனோடு இருந்த மக்களும் நீரூற்றின் கிட்டப் போய் தங்கினார்கள். அப்போது கடவுள் கிதியோனிடம் இத்தனை மக்கள் போரிடச் சென்றால் தன் கைகளால் வெற்றி பெற்றோம் என்று மக்கள் நினைத்துவிட இடம் கொடுக்க கூடாது என்று இருதயத்தில் பயமுள்ளவர்கள் திரும்பலாம் என்று கிதியோனை சொல்லச் சொல்லி சொன்னார், கிதியோன் இதைச் சொன்னவுடன் இருபதாயிரம்பேர் திரும்பிச் சென்றனர். மீதம் பதினான்காயிரம் பேர் மட்டும் இருந்தனர். மீண்டும் கிதியோனிடம் கடவுள் அவர்களை நீரூற்றில் தண்ணீர் குடிக்குமாறு சொன்னார், அதில் நக்கி தண்ணீர் குடிப்பவனை மட்டும் தேர்ந்தெடு என்று சொன்னார். அதில் முந்நூறு பேர் மட்டும் கடவுள் சொன்னபடி நீர் குடித்தனர். அவர்களை நூறு நூறு பேராய், மூன்று படைகளாய் பிரித்தான்.

தைரியம் வந்தது

மீன்டும் கடவுள் கிதியோனுக்கு தைரியம் வரவைக்க மீதியானியரின் கூடாரம் அருகில் போகச் சொன்னார். அங்கே இருவர் இஸ்ரவேல் படைகளைப்பற்றி மிகவும் மிரண்டுபோய் பேசிக் கொன்டு இருந்தனர். மேலும் இருவர் ஒரு சொப்பனத்தைப் பற்றி பேசினர். அதாவது, இதோ ஒரு கனவு கண்டேன்; சுடப்பட்ட ஒரு கோதுமை அப்பம் மீதியானியரின் தங்கியிருந்த இடத்தின் கூடாரத்திற்கு வந்து கூடாரத்தை தள்ளிவிட்டது கூடாரம் விழுந்துகிடந்தது என்றான்.அன்றிரவு கடவுள் மீதியானியரின் மீது படையெடுக்கச்சொன்னார். கிதியோன் மூன்று படைகளையும் எக்காளமும் தீவட்டியையும் பானைகளையும் எடுத்துக்கொண்டு புறப்படச் சொன்னான்.
நான் அங்கு என்ன செய்கிறேனோ அதையே நீங்களும் செய்யுங்கள் என்றும் கட்டளையிட்டான்.

கிதியோன் வெற்றிபெற்றான்
மீதியானியரின் படையருகே சென்றவுடன் மூன்று படைகளின் மனுஷரும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கடவுளுடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு, அந்த‌ சுற்றிலும் அவரவர் தங்கள் நிலையிலே நின்றார்கள்; அப்பொழுது அப்பகுதில் இருந்தவர்கள் எல்லாரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள். முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கடவுள் அப்பகுதியெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார்; மீதியானியர்கள் ஒழிக்கப்பட்டார்கள்.

Post a Comment

0 Comments