இஸ்ரவேலர்கள் அடிமையானார்கள்
இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் கடவுளின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கடவுள் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார்.
இஸ்ரவேல் மக்கள் கடவுளிடம் வேண்டினர்.
நற்செய்தி
அப்பொழுது தாண் வம்சத்தானாகிய மனோவா இருந்தான். அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள். கடவுளின் தூதுவன் அந்த பெண்னுக்கு தரிசனமாகி, அவளை நோக்கி, இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்.அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தேவனுக்கென்று இருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.
சிம்சோன்
பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள். அந்தப் பிள்ளை வளர்ந்தது; கடவுள் அவனை ஆசீர்வதித்தார். சிம்சோன் பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,அவளை திருமணம் செய்யவேண்டும் வேண்டும் என்றான்.
சிங்கத்தைக் கொன்றான்
அப்படியே சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தபோது, ஒரு குட்டிச் சிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது. அப்பொழுது கடவுளின் ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அந்த சிங்கத்தை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப் போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.
காதல் தோல்வியும் கோபமும்
சில நாள் சென்றது சிம்சோனுக்கும் நிச்சயக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையே ஒரு சிறு சன்டை வந்தது. இதனை அறிந்த பெண்ணின் தந்தை நிரந்தரமாய் இவர்களுக்குள் பகை என்று என்னி சிம்சோனிற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சிம்சோனின் நன்பனுக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டான்.மற்றொரு நாள் அங்கே வந்த சிம்சோன் அதை அறிந்து மிகவும் கோபமடைந்தான் பின்பு அவன் பெலிஸ்தியரின் வயல் வெளிக்குச் சென்று நரிகளைப் பிடித்து அவைகளின் வாலில் தீப்பந்தங்களை கட்டி வயல்வெளி முழுவதும் அழித்துப் போட்டான். அவன் இப்படிச் செய்ததற்கு அந்த பெண்னும் அவரது தகப்பனும்தான் என்று பெலிஸ்தியர்கள் என்னி அந்த இருவரையும் கொன்றுபோட்டார்கள்.
ஆயிரம் பேரைக் கொன்றான்
பெலவீனம் தெரிந்தது
பின்பு ஒரு முறை காசா பகுதியில் ஒரு வேசியின் வீட்டுக்குச் சென்றான் அங்கே பெலிஸ்தியர்கள் அவனை கொலை செய்யத் திட்டம் தீட்டி கதவைப் பூட்டி கதவருகில் காத்திருந்தனர். ஆனால் சிம்சோன் கதவை தாள்பாலோடு தூக்கிக் கொண்டு சென்றுவிட்டான். பின்பு வேறொரு பெண்னுடன் நட்புக்கொன்டிருக்கிறான் என்று தெரிந்ததும் அவளைப் போய் பார்த்து அவளுக்கு ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு கொடுப்போம், அவனது பலம் எதனால் முறியடிக்கப்படும் என்று கேட்டுச் சொல்லச் சொன்னார்கள். அவளும் அவ்வாரே கேட்டுச் சொன்னாள், பின்பு அவனுக்கு தூக்கம் வரச்சொல்லி அவன் தலைமுடி நீக்கப்பட்டது அப்போது அவன் பெலன் குன்றிப்போனான்.
இஸ்ரவேல் மக்கள் விடுதலை
0 Comments