இஸ்ரவேல் மக்களின் விருப்பம்
சாமுவேல் வயது முதிர்ந்தவனாக ஆன போது அவனது மகன்கள் கடவுளைவிட்டு வழிவிலகிப் போனார்கள். அவர்கள் பரிதானம் வாங்கிக்கொண்டு நீதியைத் திருப்பினார்கள். இதனால் இஸ்ரவேல் மக்கள் திரன்டு சாமுவேலிடம் வந்து தங்களுக்கு அரசன் வேண்டும் என்றும் அவனே இனி எங்களை வழி நடத்தவேன்டும் என்றும் வேண்டினர்,சாமுவேல் கடவுளிடம் முறையிட்டான், கடவுளுக்கு இஸ்ரவேல் மக்களை தீர்க்கதரிசிகள் மூலமும் நியாயாதிபதிகள் மூலமும் மட்டுமே வழி நடத்த விரும்பினார், ஆனாலும் மக்களின் பிடிவாதத்தால் சம்மதித்தார்.
சவுல்
இஸ்ரவேல் மக்களில் சிறிய கோத்திரமான பென்யமின் கோத்திரத்தில் பிறந்த மிகவும் அழகும் உயரமும் கொன்ட சவுலை ஆண்டவர் சாமுவேலுக்கு காட்டி அவனை அரசனாக்கும் படி கட்டளையிட்டார்.சவுலின் தலையில் எண்ணெய் ஊற்றி சாமுவேல் அரசனாக அறிவித்தான் ஆனால் சவுல் முதலில் அரசனாக பயந்தான் பிறகு கடவுளின் கட்டளையை ஏற்றுக் கொண்டான்
சவுலின் ஆட்சி
அந்த காலகட்டத்தில் அம்மோனியனான நாகாஸ் என்பவன் இஸ்ரவேலருக்கு விரோதமாக படையெடுத்து வந்தான். ஆனால் இஸ்ரவேலர்கள் சவுலின் தலைமையில் பெரும் வெற்றி அடைந்தனர்.அக்கால கட்டத்தில் இஸ்ரவேலர்கள் தங்களுக்கு அரசன் வேன்டும் என்று கடவுளின் சித்ததிற்கு வேறுபட்டபடியால் தேசமெங்கும் வரட்சி உண்டானது. பின்பு சாமுவேல் கடவுளிடம் வேண்டிக் கொன்டதால் கடவுள் மனமிறங்கினார், தேசமெங்கும் நல்ல மழை பொழிந்தது. மக்கள் கடவுளைவிட்டு விலகாமல் வாழ்ந்து வந்தனர்.
ஒரு வருடம் கழித்து பெலிஸ்தியர்கள் இஸ்ரவேல் மக்கள் மீது படையெடுத்து வந்தனர் சவுலின் மகன் யோனத்தான் அவர்கள் மீது படையெடுத்து ஒரு பகுதியினரை வெற்றி கொன்டான். மேலும் சவுல் இஸ்ரவேலர்களின் அரசனாக இருந்த நாளெல்லாம் பெலிஸ்தரின் மேல் கடினமான யுத்தம் நடந்தது கொன்டிருந்தது.
சவுலின் மீறுதல்
ஒருநாள் சாமுவேலிடம் கடவுள் வந்து ” இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்தற்காக அவர்களை இஸ்ரவேலர்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தேன் நீங்கள் அவர்கள் மேல் படையெடுத்துச் சென்று அவர்களை வெற்றிகொள்ளுங்கள், மேலும் அவர்களது உடமைகளையும் சொத்துக்களையும் அழித்துவிடுங்கள்” என்று சொன்னார்.கடவுளின் கட்டளைப் படி இஸ்ரவேலர்கள் சவுல் தலைமையில் அமலேக்கியர்களின் மேல் படையெடுத்து வெற்றியடைந்தார்கள், ஆனால் அவர்களின் உடமைகளை அழிக்க மனதில்லாமல் நல்ல வளமையானவைகளைக் கொள்ளையிட்டு வந்தனர்.
கடவுளின் மணஸ்தாபம்
தன் சொல்லைக் கேட்காமல் இஸ்ரவேல் மக்கள் அமலேக்கியர்களை கொள்ளையிட்ட சம்பவத்தால் சவுலின் மேல் கடவுள் மனஸ்தாபம் அடைந்தார், அவர் சாமுவேலைப் பார்த்து, ” நான் சவுலுக்கு இஸ்ரவேலரை ஆளும் தகுதியை இழக்கச் செய்தேன். இனி அவன் மேல் அசுத்த ஆவியை வரப்பன்னுவேன், நான் உனக்கு இஸ்ரவேலரை ஆள சரியான ஒருவனை உனக்கு காட்டுகிறேன் நீ அவனை அரசனாக்கு என்று சொன்னார்”
0 Comments