Header Ads Widget

Responsive Advertisement

31. எலியா


ஆகாப்
யூதா தேசத்தை ஆகாப் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன் முன்பிருந்த மற்ற மன்னர்களைப் பார்க்கிலும் மீறுதலான காரியம் ஒன்றைச் செய்தான் அதாவது அவன் பாகால் என்ற அன்னிய தெய்வத்தை வணங்கி வந்தான்.

மீறுதலுக்கு தண்டனை
கடவுள் எலியா என்ற தன் ஊழியக்காரனை ஆகாபின் அரன்மனைக்கு அனுப்பி; நீ செய்த மீறுதலின் நிமித்தம், இனிமேல் இத்தேசத்தில் பனியும் மழையும் வராது, பஞ்சம் வரும். இது கடவுளின் வார்த்தை என அறிவித்தான்.

காக‌ங்க‌ள் உணவுகொடுத்தல்
பின்பு க‌ட‌வுள் ப‌ஞ்ச‌த்தால் எலியா பாதிக்க‌ப்ப‌டாம‌ல் இருக்க‌ அவ‌னை கிழ‌க்கே இருக்கும் கேரீத் ஆற்ற‌ருகில் வ‌சிக்குமாறும் தாகத்திற்கு அந்த‌ ஆற்றுத்த‌ண்ணீரை குடித்துக் கொள்ளும் ப‌டியும்
காக‌ங்க‌ள் உன‌க்கு உன‌வு சேக‌ரித்துக் கொடுக்கும் என‌ சொன்னார். எலியாவும் அப்ப‌டியே செய்தான். க‌ட‌வுள் சொன்ன‌ வாக்குப்ப‌டியே அவ‌னை காக‌ங்க‌ள் கொண்டு ப‌ராம‌ரித்தார்.

க‌ட‌வுளின் அட்ச‌ய‌ப்பாத்திர‌ம்
சில‌ நாட்க‌ளில் கேரீத் ஆறு வ‌ற்றிப்போன‌து. க‌ட‌வுள் எலியாவை ஒரு ஏழை வித‌வையிட‌ம் அழைத்துச் சென்றார். அப்பெண்ணிட‌ம் ஒரு க‌ல‌ய‌த்தில் ஒருபிடி மாவும் கொஞ்ச‌ம் எண்ணெயும் ம‌ட்டுமே இருந்த‌து. எலியா அந்த‌ மாவையும் எண்ணெயையும் ம‌ழை வ‌ரும் நாள் வ‌ரை குறைவ‌து இல்லை என‌ ஆசீர்வ‌த்திதான். எலியாவும், அந்த விதவைப் பெண்ணும், அவளது மகனும், பஞ்ச காலத்திலும் திருப்தியாக உணவருந்தினார்கள். அவைக‌ள் ம‌ழைவ‌ரும் நாள் வ‌ரை தீர்ந்து போகாமல் இருந்தது.

விதவையின் மகனை சுகப்ப‌டுத்துதல்
ஒருமுறை விதவையின் மகன் நோயால் பாதிக்கப்பட்டு மூர்ச்சையனான். அப்பெண் எலியாவிடம் முறையிட்டாள். எலியா கடவுளிடத்தில் பாரமாய் ஜெபித்தான். அப்போது கடவுள் அச்சிறுவனை குணமாகினார்.

எலியாவின் சவால்
கடவுளின் வார்த்தை எலியாவுக்கு உண்டாகி அவனை ஆகப்பிடம் கொன்டு சென்றது. ஆகாப் பாகால் தீர்க்கதரிசிகளை ரகசியமாய் ஒரு இடத்தில் வைத்து உணவு கொடுத்துப் பராமரித்து வந்தான். எலியா, மன்னனாகிய ஆகாபிடம் யார் உண்மையான தெய்வம் என அறிய நாட்டு மக்களையெல்லாம் கூட்டி அவர்கள் முன்னால் நிரூபிக்க பாகால் தீர்க்கதரிசிகளுக்கும், தனக்கும் ஒரு சோதனை வைக்க வேண்டும் எனக்கேட்டான். ஆகாப்பும் அதற்கு சம்மதித்தான்.

வானத்திலிருந்து அக்கினி
எலியா சொன்னபடியே மக்கள் முன்னியில் எலியாவும் பாகல் தீர்க்கதரிசிகள் நானூறுபேரும் கூடினார்கள். எலியா மக்களைப் பார்த்து: இதோ யார் உண்மை தெய்வம் என அறிய நான் ஒருவனும், பாகல் தீர்க்க தரிசிகள் நானூறு பேரும், நீரூபிக்கப் போகிறோம். இதோ நாங்கள் பலி செலுத்துவோம், யாருடைய பலியை வானத்திலிந்து வரும் அக்கினி எடுத்துக் கொள்ளுமோ… அவர்களின் கடவுளே உண்மையானவர், என அறியுங்கள் என அறிவித்தான்.

சோதனை தொடங்கியது
முத‌லில் பாகால் தீக்க‌த‌ரிசிக‌ள் நானூறுபேரும் சேர்ந்து க‌ன்றுக்குட்டி ஒன்றை ப‌லியிட்டு அத‌னை ப‌லிபீட‌த்தில் வைத்து, காலை முதல் மதியம் வரை பாகாலே வாரும் என‌ கூக்குர‌ட்டுக் கூப்பிட்டார்கள். ப‌லிபீட‌த்தின் எதிரில் நின்று ஆடினார்க‌ள். ஆனால் எந்த‌ ப‌திலும் வ‌ர‌வில்லை. மேலும் அவர்கள் கத்தியால் தங்கள் உடலைக் கீறிக்கொண்டார்கள். மாலையானது ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. பின்பு எலியா த‌ன் ப‌லிபீட‌த்தில் ஒரு க‌ன்றுக்குட்டி ஒன்றை வைத்து; தண்ணீரையும் அதன் மேல் ஊற்றச் சொன்னான். பின்பு அவன் வானத்தை நோக்கி: யாக்கோபின் தேவனே, ஈசாக்கின் தேவனே, நீரே உண்மையானவர் என இம்மக்கள் அறிந்து கொள்ளும்படி செய்யும் என வேண்டினான். அப்போது வானத்திலிருந்து தீ இரங்கியது அது எலியாவின் பலிபீடத்தில் இறங்கி தகன பலியையும் விற‌குக‌ளையும் ஊற்ற‌ப்ப‌ட்ட‌ த‌ண்ணீரையும் எடுத்துக்கொண்ட‌து.

மக்களின் மன‌மாற்றம்
இந்த அதிசய‌த்தைப் பார்த்த மக்கள் மனம் மாறினார்கள். அவர்கள் கர்த்தரே உண்மையானவர் என அறிக்கையிட்டார்கள். அப்போது எலியா மக்களை நோக்கி: பொய்யான பாகாலை வண‌ங்கும் பாகால் தீர்க்கதரிசிகள் அனைவரையும் கொன்று போடுங்கள் என கட்டளையிட்டான். மக்களும் அப்படியே செய்தனர். பாகால் தீர்க்கதரிசிகள் ஒருவரும் மிஞ்சவில்லை.

மழை வந்தது
பின்பு எலியா ஆகாப்பை நோக்கி நீர் போய் உணவு அருந்தும் மழை வரும் சத்தம் கேட்கிறது என சொன்னான் ஆகாப் உணவருந்தப் போனான். பின்பு எலியா மலைமேல் ஏறி தன்முகம் மழங்காலில் பட உருக்கமாக கடவுளிடம் மழைக்காய் வேண்டினான், பின்பு தன் வேலைக்காரனை கடல் கரைக்கு அனுப்பி மேகம் திரள்கிறதா? எனப் பார்க்கச் சொன்னான். இப்படி ஏழுமுறை ஜெபித்து மேகம் வருகிறதா? எனப் பார்க்கச் சொன்னான். ஏழாவது முறை எலியாவிடம் வேலைக்காரன் ஒரு சிறு மேகம் வருகிறது என அறிவித்தான். பின்பு பெருமழை பொழிய ஆரம்பித்தது

எலியாவின் சாபம்
ஒரு சமயம் சமேரியாவின் ராஜா தனக்கு வந்த வியாதி பற்றி இஸ்ரவேல் கடவுளிடம் விசாரிக்காமல், எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்க ஆட்களை அனுப்பினான். அப்போது எலியா அவர்களுக்கு எதிர்கொண்டுபோய். கடவுள் தனக்கு சொன்ன படியே அவர்களை நோக்கி: “இஸ்ரவேலில் கடவுள் இல்லையென்றா எக்ரோன் செல்லுகிறீர் நீங்கள் இப்படிச் செய்ததால் உங்கள் மன்னன் தன் கட்டிலிருந்து இறங்காமல் சாகவே சாவான் என சபித்தான்”. சமேரியா ராஜாவும் எலியாவின் சாபத்தின் படியே செத்தான்..

Post a Comment

0 Comments