Header Ads Widget

Responsive Advertisement

35.எசேக்கியா


ஆலய நடை திறக்கப்பட்டது
ஆகாஸ் நித்திரையடைந்தபின்பு, அவனை எருசலேம் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் ராஜாக்களின் கல்லறைகளில் அவனைக் கொண்டுவந்து வைக்கவில்லை; அவன் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான். எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான். கடவுளின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்தான்,

எசேக்கியாவின் சிறப்பு
எசேக்கியா ராஜா யூதாவை ஆட்சி செய்தவர்களில் இதற்கு முன் இருந்தவர்களைப்பார்க்கிலும் அவனுக்குப்பின் வந்தவர்களை விடவும் நீதியாகவும் உந்தமனாகவும் நடந்துகொண்டான்.

அன்னிய தெய்வங்களின் சிலைகள் உடைக்கப்பட்டன‌
எசேக்கியா தனக்கு முன்னிருந்தவர்கள் கட்டிவைத்திருந்த அன்னிய தெய்வங்களின் சிலைகளையும் பலிபீடங்களையும் உடைத்தெரிந்தான். மேலும் மோசேவின் காலத்தில் வைக்கப்பட்ட பாம்பின் சிலையையும் எடுத்துப்போட்டான். ஏனென்றால் மக்கள் எசேக்கியாவின் காலம் வரை அந்த பாம்பின் சிலையை வணங்கி வந்தார்கள்.

ஏசாயா
எசேக்கியா ராஜாவின் கால‌த்தில்தான் ஏசாயா என்ற‌ க‌ட‌வுளின் ஊழிய‌க்கார‌ர் வாழ்ந்துவந்தார். அவ‌ர் எசேக்கியா ராஜாவின் போக்குவ‌ர‌த்து அனைத்தும் க‌ட‌வுளின் பார்வைக்கு செம்மையான‌தாய் இருக்க‌ உத‌விசெய்தார்.
இதனால் எசேக்கியா சென்ற‌ இடமெல்லாம் சிறந்தான்.

எசேக்கியாவிற்கு அற்புதம்

ஒருமுறை எசேக்கியா ராஜா வியாதியில் விழுந்தான். அப்போது அங்கே வந்த ஏசாயா நீ பிழைக்க‌ப்போவ‌தில்லை என‌ இஸ்ர‌வேல‌ர்க‌ளின் க‌ட‌வுள் சொல்கிறார் என அறிவித்தான். அப்போது எசேக்கியா க‌ட‌வுளை நோக்கி ம‌ன்றாடி விண்ண‌ப்ப‌ம் செய்தான்.

அப்போது சிறிது தூர‌ம் சென்ற‌ ஏசாயா திரும்பி அர‌ன்ம‌னைக்கு வ‌ந்து எசேக்கியாராஜாவிடம் உன் விண்ணப்பத்தை கடவுள் கேட்டார். மேலும் உன‌க்கு இற‌ங்கியிருக்கிறார். உன் ஆயுசு நாட்க‌ளில் ப‌தினைந்து நாட்களை கூட்டியிருக்கிறார். என‌ அறிவித்தான்.

Post a Comment

0 Comments