எசேக்கியாவிற்குப் பின் வந்த யூதா நாட்டு மன்னர்கள் எசேக்கியா போல அல்லாமல் மீண்டும் மீறுதலான காரியங்களைச் செய்ய ஆரம்பித்தார்கள். இது இஸ்ரவேல் கடவுளின் பார்வையில் மிகவும் பொல்லாததாக இருந்தது. இதனால் யூதாதேசம் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் என்பவனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது, அப்போதும் மக்கள் திருந்தவில்லை. தங்கள் மீருதல்களை உணராமல் எகிப்து நாட்டு மன்னனின் ராணுவ உதவியை நாடினார்கள்.
எரேமியா
சிதேக்கியா என்பவன் யூதாவில் அரசாண்டபோது, எரேமியா என்ற கடவுளின் ஊழியக்காரனிடம் சென்று கடவுளின் வார்த்தை அறிய சிதேக்கியா ஆள் அனுப்பினான் அதற்கு எரேமியா: எகிப்து ராணுவம் வந்தாலும், அவர்கள் மிகவும் பலமானவார்களாய் இருந்தாலும், பாபிலோன் ராணுவத்திலிருப்பவர்கள் அனைவரும் காயம்பட்டிருந்தாலும், யூதாதேசம் பாபிலோனியர்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படும். எனவே நீங்கள் பாபிலோனியர்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்க உடனடியாக பாபிலோனியர்களிடம் சென்று சேர்ந்து விடுங்கள். என்று உங்கள் மன்ன்னிடம் சொல்லுங்கள் என அறிவித்தான்.
எரேமியாவிற்கு நேர்ந்த கதி
மீண்டும் மக்களிடம் எச்சரிக்கை
முற்றத்திலிருந்த படியே மக்களிடம் கடவுளின் வார்த்தைகளை மக்களிடம் எச்சரித்துக்கொண்டிருந்த எரெமியாவைப் பார்த்த பிரபுக்கள் சிலர் எரேமியா மக்களின் வீரத்தையும் தைரியத்தையும் குறைக்கும் வகையில் செயல்பட்டான் எனச் சொல்லி அவனைக் கொலை செய்ய வேணுமென அரசனிடம் முறையிட்டார்கள். அரசன் அவனைக் கொல்ல மணமில்லாமல் மல்கியா என்பவனின் பாழடைந்த கினற்றில் இறக்கிவிட ஆனையிட்டான். அப்படியே எரேமியாவை கினற்றில் இறக்கிவிட்டார்கள்.
எபேத்மெலேக்
எரேமியாவைத் கினற்றிலே போட்டதை ராஜாவின் அரன்மனையில் இருந்த எபேத்மெலேக் எனும் எத்தியோப்பிய அதிகாரி கேள்விப்பட்டான்; கடவுளின் ஊழியக்காரனான எரேமியாவின் மேல் பரிதாபம் கொண்டான். இதனால் அவன் மன்னனிடம் சென்று: கினற்றில் உணவில்லாமல் எரேமியா இறந்து விடுவான். கடவுளின் பணியாளனைக் கொன்ற பாவம் உமக்கு வேண்டாம. உடனே அவனைக் சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட வேண்டும் எனக்கேட்டுக் கொண்டான். அதன் பேரில் மீண்டும் சிதேக்கியா ராஜா எரேமியாவை சிறையில் அடைக்க ஆனை பிறப்பித்தான்.
நேபுகாத் நேச்சாரின் படையெடுப்பு
எரேமியா எச்சரித்தபடியே பாபிலோனியர்கள் படையெடுத்து வந்தார்கள். யூதா தேசம் அவர்கள் கையில் மீண்டுமாய் ஒப்புக்கொடுக்கப் பட்டது அப்போது எருசலேம் நகரின் பெரிய கட்டிடங்கள் மற்றும் சாலமோன் ராஜாவால் கட்டப்பட்ட தேவாலயம் ஆகியவைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மேலும் நாட்டிலுள்ள அனேக மக்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக சிறைபிடித்துக் கொண்டு செல்லப்பட்டனர்.
எருசலேம் நகரும் தேவாலயமும் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் பாபிலோனியர்கள் எருசலேமிலுள்ள சொத்துக்களுக்கும் தோட்டங்களுக்கும் ஏழைகளை அதிகாரியாய் வைத்துவிட்டுச் சென்றனர்.
எழுபது வருடங்களுக்குப் பிறகு
பாபிலோன் படையெடுப்புக்குப் பிறகு எழுபது வருடம் ஓய்ந்திருந்தது அதன் பின்னர் பாபிலோனிலிருந்து பிரிந்த பெர்சியாவின் மன்னரான கோரேஸ் என்பவனுக்கு கடவுளின் வார்த்தை உண்டாகி மீண்டுமாய் எருசலேமில் புதிய ஆலயம் கட்டப்பட ஆனை பிறப்பித்தான்.
புதிய ஆலயம் கட்டப்பட்டது
எருசலேமில் கொள்ளையிடப்பட்ட பொருட்களோடும் மன்னனின் நிதியுதவியோடும், பெர்சியாவில் எஞ்சியிருந்த யூதா மக்கள் எருசலேமிற்குத் திரும்பி வந்து மீண்டுமாய் எருசலேம் தேவாலயத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள். அப்போது தடைகள் பல வந்தாலும் அவைகள் கடவுளின் சித்தத்தால் முறிந்து போனது.
0 Comments