Header Ads Widget

Responsive Advertisement

37 தானியேல்


பாபிலோனில் யூதர்கள்
பாபிலோன் ராஜா நேபுகாத் நேச்சார் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட யூதா தேசத்தாரை அடிமைகளாக பிடித்துச் சென்றார்கள் அல்லவா? அப்படி சிறைபிடித்துச் சென்றவர்களில் சிறந்த அறிவுள்ள வாலிபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்நாட்டின் எழுத்துக்களையும், மொழியையும், கற்றுக்கொடுக்க அரசன் ஆனையிட்டான். மேலும் தன் உணவில் ஒரு பகுதியை அவர்கள் கற்றுக்கொள்ளும் காலம் வரை உண்ணவும் அனுமதி கொடுத்தான் அவ்வாறு கற்றுக்கொண்டவர்களில். தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா, ஆகிய நால்வர் இருந்தனர். அவர்களுக்கு முறையே பெல்தெஷாத்சார், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ, என்று பாபிலோனிய பிரதானிகள் பெயர் சூட்டினார்கள். இவர்கள் யூத பரிசுத்தர்களாய் இருந்தபடியால் மன்னன் தங்களுக்கு கொடுத்த உணவை எடுத்துக்கொள்ள கூடாமல் தங்களுக்கு சைவ உணவே வேண்டும் என வேண்டினர். எனவே அதிகாரிகள் அவர்களுக்கு பத்து நாட்கள் மரக்கறி உணவைக் கொடுத்து பரிசோதித்தனர். அவர்கள் மற்றவர்களைக்காட்டிலும் பொலிவானவர்களாகவே இருந்தனர். இதனால் அவர்களுக்கு அவர்கள் விரும்பிய உணவே வழ‌ங்கப்பட்டது.

சிறந்த நால்வர்
முடிவாக பயிற்சி முடிந்ததும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல சிறந்த தேர்ச்சி பெற்றவர்கள் எவருமில்லை இதனால் அவர்கள் மன்னனிடத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே மன்னன் தன் நாட்டிலுல்ல சகல ஞானிகளைவிட இவர்கள் சிறந்தவர்கள் என்பதைக் கண்டான்.

மன்னன் கண்ட கனவும் அரசானையும்

நேபுக்காத் நேச்சார் ஒருநாள் ஒருகனவு கண்டான். அதை அறிவித்து விளக்கமளிக்கும் ஞானிக்கு ஏராளமான பரிசுப் பொருள்கள் கிடைக்கும். ஒருவேளை சொல்லாமல் போனால் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள். எனவும் அறிவித்தான். நாட்கள் கடந்தது ஆனால் கனவை சொல்லவோ அதை விளக்கவோ யாராலும் முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மன்னன் நாட்டிலுல்ல சகல ஞானிகளையும் ஜோதிடர்க்ளையும் குறிசொல்பவர்க‌ளையும் கொலை செய்யும்படி உத்தரவிட்டான்.இதை கேள்விப்பட்ட தானியேல் மற்றும் மூவரும் இஸ்ரவேல் தேவனிடம் மன்றாடினார்கள். அன்று இரவு அவனுக்கு கனவையும் அதன் பொருளும் தரிசனமானது, பின்பு மன்னனிடம் சென்று கனவுக்கான பொருளை எடுத்துச் சொல்லி அதன் விளக்கத்தையும் விளக்கமாகச் சொன்னான். மன்னன் திருப்தியடைந்தான். மேலும் மன்னனாகிய நேபுக்காத் நேச்சார் தானியேல் முன்னால் முகம்குப்புற விழுந்து வணங்கி இஸ்ரவேலின் தேவனே உண்மையான தேவன் என்று அறிக்கையிட்டான்.

நால்வ‌ருக்கும் உயர்வு
ம‌ன்ன‌ன் தானியேலுக்கு ஏராள‌மான‌ ப‌ரிசுப்பொருளும் த‌ன் நாட்டின் அதிப‌தியாக‌வும் நாட்டிலுள்ள‌ எல்லா அறிஞ‌ர்க‌ளுக்கும் ஜோதிட‌ர்க‌ளுக்கும் குறிசொல்லுப‌வ‌ர்க‌ளுக்கும் தலைவ‌னாய் வைத்தான். தானியேல் கேட்டுக்கொண்ட‌த‌ன் பேரில் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ, ஆகிய‌ மூன்று பேர்க‌ளுக்கும் பாபிலோன் மாந‌க‌ர‌த்துக் காரிய‌ங்க‌ளை விசாரிக்கும் அதிகாரிக‌ளாக‌ நிய‌மித்தான்.

பொற்சிலையும் நெருப்புச் சூளையும்
நேபுக்காத் நேச்சார் தன்னுடைய அறுபது அடியுள்ள தன்னுடைய பொற்சிலை ஒன்றை நிறுவினான். மேலும் பாபிலோன் தேசமக்கள் இசைமுழக்கம் செய்யப்படும்போது அந்த சிலையை தாழ விழுந்து வணங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அப்படி செய்யாமல் போனால் அவர்கள் எரிகின்ற அக்கினி சூளையில் போடப்பட்டு சுட்டெரிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
மக்களெல்லாரும் மன்னனின் கட்டளைக்கு அடிபணிந்தார்கள். ஆனால் பாபிலோன் மாநகர விசாரிப்பு அதிகாரிகளான ‌சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ, ஆகிய மூவரும் இஸ்ரவேல் இறைவனைத்தவிர வேறே சிலைகளை வணங்குவதில்லை எனவே அவர்கள் மன்னனின் ஆனைக்கு கட்டுப்படவில்லை. இதை அறிந்த மன்னன் அவர்களை ஏழு மடங்கு சூடாக்கப்பட்ட அக்கினிச்சூளைக்குள் அவர்களை போடும் படி உத்தர‌விட்டான். அவர்களை பலமான வீரர்கள் கயிறுகளால் கட்டி தூக்கிக் கொண்டு அக்கினி சூளைக்குள் கொண்டு சென்றனர். போகும் போதே சூட்டில் வீரர்கள் மடிந்தார்கள். ஆனால் எரிகிற சூளைக்குள் கொண்டு செல்லப்பட்ட சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ, ஆகியோருடன். நான்காவதாக ஒருவரும் தீயினால் பாதிக்கப்படாமல் உலாவுவதை மன்னன் கண்டு வியந்தான். மேலும் அவர்களை வெளியே வருமாறு பணித்தான். அவர்கள் வெளியே வந்து இஸ்ரவேல் கடவுளின் மகிமையை வெளிப்படுத்தினார்கள். இதனால் மன்னன் இஸ்ரவேல் கடவுளைப்போல உலகத்தில் வேறே கடவுள் இல்லை என மீண்டும் அறிக்கையிட்டான். மேலும் அவர்களுக்கு விரோதமாகப் பேசுகிறவர்கள். கொலைசெய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தான். மேலும் அவர்களை உயர்த்தினான்.

மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்
நேபுகாத் நேச்சார் மரணடைந்தபின் பெல்ஷாத்சார் என்பவன் அரசனானான். அவன் தன் பெரிய விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்ய்திருந்தான். மேலும் அவன் திராட்சை ரசம் குடிக்க இஸ்ரவேல் தேவலாயத்திலிருந்து கொள்ளையிடப்பட்ட பாத்திரங்களில் பானம் பன்னச் சொன்னான். அப்போது ஒரு கை தோன்றி சுவற்றில் மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என எழுதியது இது கண்ட மன்னன் கலங்கினான். மேலும் அவன் நாட்டினுள்ள எல்லா ஞானிகளையும் அழைத்து பொருள் கேட்டான் ஆனால் ஒருவருக்கும் அதன் பொருள் தெரியவில்லை.

அரன்மனையில் தானியேல்
தாணியேல் பற்றி மகாரானியின் மூலம் கேள்விப்பட்டு அவனை வரவழைத்து அதற்கு பொருள் கேட்டான். அதற்கு தாணியேல்:இந்த வசனத்தின் அர்த்தமாவது, மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும், தெக்கேல் என்பதற்கு நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும், பெரேஸ் என்பதற்கு, உன ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தமாம் என்றான். உடனே மன்னன் தானியேலுக்கு ஏராளமான பரிசுகளும் நாட்டின் மூன்றாம் அதிபதியாகவும் அறிவித்தான். அன்றிரவு பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டான். பின்பு தரியு என்பவன் அரசனாக முடிசூட்டிக்கொண்டான்.

தரியுவும் தானியேலும்
தரியு தானியேலின் மேல் பிரியம் வைத்திருந்தான். நாட்டிலுள்ள எல்லா பிரபுக்களும் அதிகாரிகளும் தங்கள் கணக்குகளை தாணியேலிடம் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவித்தான். இதனால் அதிகாரிகளும் பிரபுக்களும் தானியேல் மேல் குற்றம் கண்டுபிடிக்க வகை தேடினார்கள்.

புதிய அரசானை
தானியேலை கடவுளை வணங்கும் காரியம் தவிர வேறே காரியங்களால் அவனை குற்றப்படுத்த முடியாது என அறிந்து மன்னனிடம் அடுத்த முப்பது நாட்களுக்கு மன்னனைத்தவிர வேறே ஒருவரையும் கடவுளையும் வணங்கக் கூடாது என அறிவிப்பும் மீறுபவர்கள் சிங்கத்தின் கெபியிலும் போடப்படுவார்கள். என அறிவிக்கச் செய்தார்கள்.

தானியேலின் வழிபாடும் தண்டனையும்
தானியேல் எப்போதும் போல மூன்று வேளையும் இஸ்ரவேல் தேவனை மழங்காலிட்டு வணங்கினான். இதை கண்டு தானியேலின் விரோதிகள் அவனை கைது செய்து மன்னனிடம் கொண்டு வந்து தன்டனையை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறினர். மன்னன் தானியேல் மேல் கொண்ட பிரியத்தினால். தன்டனையை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தினான். இதனால் ஆத்திரமடைந்த பிரபுக்களும் அதிகாரிகளும் தானியேலை தூக்கிக் கொண்டுபோய் சிங்கத்தின் கெபியில் அவனைப் போட்டார்கள்.

மன்னனின் சோகமும் தானியேலின் பாதுகாப்பும்
தானியேல் சிங்கத்தின் கெபியில் போடப்பட்டதை அறிந்ததும் மன்னன் மிகவும் கலக்கமடைந்து அன்றிரவு உணவு அருந்தாமலும், தூங்காமலும் காத்திருந்து அதிகாலமே சிங்கக் கெபிக்கு ஓடினான். அங்கே தானியேல் எவ்வித சேதமும் அடையாமல் பாதுகாப்பாய் இருந்தான். அதைக்கண்டு மன்னன் நிம்மதியடைந்து இஸ்ரவேல் கடவுளின் நித்தியத்தை அறிக்கையிட்டான். மேலும் தானியேல் மேல் குற்றம் சொன்னவர்களை அழைத்து வந்து சிங்கத்தின் கெபியில் போட்டான். அவர்கள் கீழே விழும் முன்னதாக சிங்கங்கள் அவர்களின் எலும்புகளை நொறுக்கிப்போட்டன. தாணியேல் பெர்சியாவின் மன்னனான கோரஸின் காலத்திலும் சிறப்புற்றான்.

Post a Comment

0 Comments