யோபு
முன்னொரு காலத்தில் யோபு என்றொரு மனிதன் இருந்தான் அவன் உலக மக்கள் அனைவரிலும் பக்திமானாகவும், கடவுளின் ஈடுஇனையில்லாத விசுவாசமுடையவனாகவும் இருந்தான். அவனுக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் இருந்தனர், வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மகனின் வீட்டிலும் விருந்து நடைபெறும். யோபு கடவுளின் பார்வையில் சிறந்தவனாக இருந்தான். அவன் செய்த காரியம் எல்லாம் வாய்த்தது. மேலும் அவனுக்கு ஏழாயிரம் ஆடுகள், மூவாயிரம் ஒட்டகங்கள், ஐநூறு காளைகள், ஐநூறு கழுதைகள், ஏராளமான பணியாட்கள் என, செல்வந்தனாய் இருந்தான்.
பிசாசின் நயவஞ்சகம்
பிசாசு உலகம் முழுவதும் சுற்றி விட்டு கடவுளிடம் சென்றான். கடவுள் யோபுவைப் போல சிறந்த நீதிமானும் பக்திமானும் உலகில் இல்லை எனச் சொன்னார். பிசாசு நீங்கள் யோபுவுக்கு ஏராளமான செல்வங்களையும் சிறப்பான பிள்ளைகளையும் கொடுத்திருக்கிறீர் ஆகவே அவன் உம்மிடம் விசுவாசியாய் இருக்கிறான். எனச் சொன்னான். கடவுள் பிசாசுக்கு மறுமொழியாக உன் கையில் யோபுவை ஒப்புக்கொடுக்கிறேன். நீ அவனின் உயிரைத்தவிர மற்ற அனைத்தையும் என்னவேண்டுமானாலும் செய் என ஒப்புக்கொடுத்தார்.
யோபுவுக்கு பிசாசின் சோதனை தொடங்கியது
ஒருநாள் யோபு மூத்த மகனின் வீட்டில் விருந்துண்டு கொண்டிருந்தபோது வேலையாட்கள் ஒவ்வொருவராக யோபுவிடம் ஓடிவந்து இயற்கை சீற்றத்தாலும் கயவர்களாளும் சொத்துக்கள் அனைத்தும் பரிபோய்விட்டதாக அறிவித்தனர். யோபு மிகவும் கலங்கிப்போனான். அப்போது மேலும் ஒரு வேலையாள் ஓடிவந்து யோபுவிடம் உன் பிள்ளைகளின் வீடுகளின் மேல் சூறாவழிக் காற்று தாக்கி அனைவரும் உயிரிழந்ததாக அறிவித்தான். இவையனைத்தும் இழந்தாலும் யோபு தன்னுடைய விசுவாசத்தை மட்டும் விடவேயில்லை. வெறும் கையோடு இப்பூமிக்கு வந்தேன் கடவுள் எல்லாவற்றையும் கொடுத்தார் அவரே எல்லாவற்றையும் எடுத்தார், எனக் கூறி கடவுளுக்கு நன்றி சொன்னான்.
பிசாசின் சோதனை நின்றுவிடவில்லை
யோபுவின் உடமைகள் வாரிசுகள் அனைத்தும் போய்விட்டாலும் கடவுள் மேல் இருக்கும் விசுவாசம் மாறாததை கண்ட பிசாசு. அவன் உடலில் கைவைத்தால் அவனது விசுவாசம் குறையும் எனக்கருதி அவன் உடல்முழுவதும் ஏராளமான கடுமையான பருக்களை வருவித்தான். ஓடுகளினால் உடலைச் சொறிந்து ஓரமாய்ப் படுத்துக்கொன்டான்.
பொறுமையிழந்தாள் மனைவி
யோபு படும் துயரங்களைக் காணச்சகிக்காத மனைவி அவனருகில் வந்து கடவுளைப் பழித்து உன் உயிரை விட்டுவிடு என ஆலோசனை சொன்னாள். அப்போது யோபு கடவுள் நமக்கு நலமானதை முழுமணதோடு பெற்றுகொண்டது போல தீமையானதையும் பெற்றுக்கொள்ள வேண்டாமா? எனக் கேள்வி எழுப்பினான். தன் விசுவாசத்தில் விடாப்பிடியாக இருந்த யோபுவை வெறுத்து மனைவி தன் ஆலோசனைகளைக் கைவிட்டாள்.
நன்பர்கள் வந்தார்கள்
யோபுவின் நண்பர் எலிப்பாசு,பிஸ்தாது,சோப்பார் மூவரும் துயரச் செய்தி கேட்டு யோபுவைப் பார்க்க வந்தனர். யோபு விரக்தியின் மிகுதியில் தான் பிறந்த நாளை சபித்தான். அவர்களில் ஒருவன் நல்லவர்கள் கெட்டதில்லை என்பது நியதி மேலும் துன்பமும் இன்பமும் நிலையில்லாதது ஆகவே நீ கடவுளை நாடு என ஆலோசனை சொன்னான்.
யோபுவின் மறுமொழி
யோபு தன் நன்பர்களிடம் தன் மோசமான நிலை முழுவதும் சொல்லி எக்காரனத்தைக் கொண்டும் தன் விசுவாசத்தை கைவிடப்போவதில்லை என உறுதியாயிருந்தான். கடவுள் அவன் விசுவாசத்தை மெச்சினார். பிசாசு வெட்கப்பட்டுப் போனான்.
இரண்டத்தனையாய் ஆசீர்வாதம்
ஒரு வழியாய் பிசாசின் சோதனை யோபுவின் வாழ்வில் நிறுத்தப்பட்டது யோபுவின் விசுவாசத்தை குழைக்கும் முயற்சியில் பிசாசு தோல்வியடைந்தான். கடவுள் யோபுவை முன்னிலமையைப் பார்க்கிலும் பின்னிலமையை அதிகமாய் ஆசீர்வதித்தார். அவனுக்கு மீண்டும் ஏழு மகன்களும் மூன்று மகள்களும் பிறந்தனர். அவனது சொத்துக்கள் பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் ஆகும். அவன் மகள்கள் மிகவும் அழகானவர்களாய் இருந்தார்கள்.
இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான். யோபு நெடுநாளிருந்து, பூரணவயதுள்ளவனாய் மரித்தான்
0 Comments