திருமணத்தை பற்றி பல விதமான கருத்துக்கள், எதிர்பார்ப்புக்கள் அநேக கேள்விகள் உங்கள் மனதில் காணப்படலாம். அவைகளுக்கெல்லாம் விடைத்தேடி வேதத்தைவிட்டு வேறு எங்கு சென்றாலும் தவறான மாதிரியை பின்பற்ற வேண்டியதாகும்.
அப்படியானால் நாம் எங்கே செல்ல வேண்டும்? என்ன செய்யவேண்டும்?
விழித்துக்கொள்! பலவிதமான நாகரீக கலாச்சாரம் திருமணம் என்ற இந்த கனமான உறவை சீர்கேடு செய்துகொண்டிருக்கிறதை நாம் அனுதின செய்தித்தாழ்;களில் வாசிக்கிறோம்;. மேலை நாடுகளிலும் இந்தியாவின் Mumbai போன்ற ஒரு சில பெரு-மாநகரங்;களில் மட்டுமே காணப்பட்ட Living Together என்ற நாகரிகம் Ladies Hostel லில் தங்கி பணிபுரியும் பெண்கள் அங்குள்ள கட்டுபாடுகள் பிடிக்காமல் அதைவிட்டு வெளியேறி, தனி அறை எடுத்துத்கௌ;வது அதிக செலவு என்பாதால் தங்களுடன் பணி;;;புரியும் எதிர்பாலினத்தினரோடு ஒரே அறையில் தங்குதல். தங்களுக்குள்ளே ஒருவித ஒப்பந்தம் செய்துகொண்டு குடும்பம் நடத்துதல், பின்பு பிடித்திருத்தால் திருமணம் செய்துகொள்ளுதல் இல்லாவிடில் பிரிந்துவிடுதல் என்பது அன்மை காலத்தில் நம்முடைய தென்மாநிலங்களில் Call Centre ல் பணிபுரியும் வாலிபர்களிடம் காணப்படும் இவ்வித கலாச்சார சீர்கேடு உனக்கு தவறான முன்மாதிரியாகிவிடக்கூடாது.
அன்பானவர்களே..! மனிதன் பாவம் செய்வதற்கு முன்னமே திருமணமானது தேவனால் ஏற்படுத்தப்பட்டது. தேவன் “மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று கண்டு அவனுக்கு ஏற்ற துணையை ஏற்படுத்துவேன் என்றார்”(அதி 2:18). மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல, ஏனென்றால் “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம், அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுன்டாகும”; (பிரசங்கி 4:9). எனவே தேவன் ஆதி மனிதனான ஆதாமுக்கு ஏற்ற துணையை ஏற்படுத்தினார். ஏற்ற துணை என்கிற போது நமக்கு பல வித கேள்விகள் எழக்கூடும். ஒரு வாலிபன் என்னிடத்தில் கேட்ட கேள்வி ~தேவன் எப்படி ஆதாமின் விலா எலும்பை எடுத்து அவனுக்கு ஏற்ற துணையை ஏற்படுத்தினாரோ அதைபோலவே இன்றும் ஓவ்வொரு மனிதனுடைய விலா எழும்பையும் எடுத்து அவனவனுக்கு ஏற்ற துணையை உண்டாக்குகிறாரா? | என்று அந்த வலிபருக்குள் இருந்த சந்தேகம் தேவன் அவனுக்குரிய ஏற்ற துணையை ஏற்படுத்தி வைத்திருக்கிறாரா என்பதே..
ஆதாமுக்கு ஏற்ற துணையை ஏற்படுத்தின அதே கர்த்தர் இன்றும் அவரை செந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு தங்களின் திருமணத்திற்க்கு முழுவதும் அவரையோ சார்ந்திருப்பவர்களுக்கு ஏற்ற துணையை ஏற்படுத்த போதுமானவர் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
ஏற்றஃ சரியான என்கிற போது நம்முடைய பார்வையில் எது ஏற்றதாகஃசரியானதாக காணப்படுகிறதோ அதே காரியம் தேவனின் பார்வையிலும் ஏற்றதாகவும், சரியானதாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுவது தவறு. நாம் பார்க்கும் விதமாய் தேவன் காரியத்தை பார்ப்பவரல்ல. “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல: உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல” என்று கர்த்தர் சொல்லுகிறார்.(ஏசாயா 55:8). நாமோ இதை புரிந்துகொள்ளாமல் நம்முடைய மாம்சீக கண்களினால் நமக்கு ஏற்ற துணையை தேடுகிறோம.;! அழகு, அந்தஸ்து மற்றும் படிப்புக்கு ஏற்ற துணை வேண்டும் என்று பிரயாசைப்படுகிறோம். நான் இங்கு அழகு, அந்தஸ்து, மற்றும் படிப்புக்கு ஏற்ற வரன் தேடுவது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அழகு, அந்தஸ்து, மற்றும் படிப்பு உள்ள நல்ல வரன் அமைவதைவிட தேவன் நமக்கு தரும் சரியான வரனே (Suitable Helper) மேலானது. இங்கு ஒரு காரியத்தை நாம் தெளிவாய்ப் புரிந்துகொள்ள வேண்டும்! எப்பொழுதுமே நல்ல காரியத்திற்கும் சரியான காரியத்திற்க்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு என்பதை! ஒரு ஊழியர் தன் பிரசங்கத்திலே ஒரு கதை சென்னார்…… அது நமக்கு நல்ல மற்றும் சரியான காரியத்திற்கான வித்தியாசததினை விளங்கிக் கொள்ள உதவும்.
அது…. ஒரு தகப்பன் தன் மகனின்-அறை அசுத்தமாயிருப்பதைப் பார்த்து தன் மகனிடம் அவர் மார்க்கெட் போய் திரும்புவதற்க்குள் அறையை சுத்தம் செய்துவைக்குமாறு கூறி சென்றார். அச்சிறுவனும் சுத்தம் செய்யமுற்படும் போது, வீட்டின் வரவேற்பு-அறை அசுத்தமாக இருப்பதைக் கண்டு அதை சுத்தம் செய்ய ஆரம்பித்தான். அதை முடித்துவிட்டு, தன் தகப்பனுடைய கட்டளையின் படி தன்னுடைய அறையை சுத்தம் செய்வதற்க்குள் அவன் தகப்பன் வீடு திரும்பிவிட்டார். அவர் வந்து பார்த்த போது வரவேற்பறை சுத்தம் செய்யப்பட்டிருந்தது! ஆனால் தான் சொன்னபடியாய் தன் மகன் அவனுடைய அறையை சுத்தம் செய்யவில்லை!? இதைப் பார்த்த அந்தத் தகப்பனின் உள்ளம் சந்தோஷம் அடைந்திருக்குமா? அல்லது துக்கம் அடைந்திருக்குமா? தன் மகன் தான் சொன்ன வேலையை செய்யாததால் நிச்சயமாய் துக்கம் அடைந்திருப்பார். அச்சிறுவன் செய்தது நல்;ல காரியமே என்றாலும் அவன் சரியான காரியத்தை செய்யத்- தவறிவிட்டான்.! தேவன்@ தம்முடைய பிள்ளைகள் அநேக நல்ல காரியம் செய்வதைவிட தமக்கு ஏற்ற சரியான காரியத்தையே செய்யவேண்டும் என்று விரும்புகிறார்.!
அநேகர் இப்படிச்சொல்லக் கேள்விப்பட்டதுண்டு., அந்த பெண் எல்லாவிதத்திலும் எனக்கு சரியான Match ஆக இருப்பாள்!! அவளே எனக்கு ஏற்ற துணை என்றும், சில பெண்கள் எனக்குப் பச்சை நிறம் பிடிக்கும் அதே நிறம் தான் அவருக்கும் பிடிக்கும். எனக்கு Fast Food ரொம்ப பிடிக்கும் அதுவும் அவருக்குப் பிடிக்கும். இப்படி பல காரியத்தை சொல்லி எங்களுக்கு எல்லா விதத்திலும் பொருத்தம் உள்ளது எனவே அவர் தான் எனக்கு ஏற்ற துணை என்று சொல்வர்.
எது? நாம் விரும்பிய, நமக்கு பிடித்த அல்லது நாம் எதிர்பார்த்த விதத்தில் துணை அமைவதா ஏற்ற துணை?
முதலாவது கவனத்தில் இருக்கவேண்டியது… வேதம் கணவன் மனைவி உறவை குறித்து சொல்லும் போது அதை கிறிஸ்துவுக்கும், சபைக்கும் ஒப்பிட்டு சொல்கிறது. அது மட்டும்மல்ல, அதி.2:24 எபே 5:31ன் படி கணவன் தன் மனைவியுடன் இசைந்து இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். என்று சொல்லப்பட்டுள்ளது, இப்படியிருக்க இரட்சிக்கப்பட்ட ஒருவர், இரட்சிக்கப்படாத ஒருவரை தன்னுடைய ஏற்ற துணையாக ஒரு போதும் ஏற்படுத்திக்கொள்ள முடியாது. ஏனென்றால்@ கணவனும் மனைவியும் ஒரே மாம்சமாய் இசைந்திருக்க வேண்டுமேயானால் அவர்கள் இருவரும் ஒரே விசுவாசம் உடையவர்களாய் இருப்பது மிகவும் அவசியம்.!! ஒருவர் இரட்சிக்கப்பட்டும் மற்றவர் இரட்சிக்கப்படாமலும் இருக்கும் போது… அவர்கள் ஒரே மாம்சமாய் இசைந்திருக்க முடியாது. அவர்கள் ஒருவேளை சரீரம், உணர்வு, சமுதாய அடிப்படையில், ஒரே மாம்சமாய் இசைந்திருக்கக்கூடும் ஆனால் ஆவிக்குரியபிரகாரமாய் ஒரே மாம்சமாய் இசைந்திருக்க ஒருபோதும் முடியாது.
அப்போஸ்தலனாகிய பவுல் 2 கொரி. 6:14 ல் ‘அந்நிய நுகத்திலே அவிசுவாசி;களுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக, நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? ” என்று ‘கொரிந்த்து” பட்டணத்தாரின் சீர்கேட்டைக் கண்டிக்கிறார்! அனால் நம் வாலிபர்கள் இந்நாட்களில் அந்நிய நுகத்துடன் பிணைக்கபடக்கூடாது என்பதை மறந்து நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்த படுத்தி வாழ்வது மிகவும் வருந்துதலுக்குரியது. தனக்கு ஏற்ற துணையை ஏற்ப்பில்லாத இடத்தில் தேடுதல் ஒருபோதும் சாத்தியமில்லை. எனவே இரட்சிக்கப்பட்ட ஆணுக்;கு இரட்சிக்கப்பட்ட பெண் மட்டுமே ஏற்ற துணையாகயிருக்க முடியும்!
அடுத்து,…….? சபைக்குள்ளே சில வாலிபர்கள் தங்களுக்கு பிடித்த நபர்களை தங்களின் துணையாக ஏற்படுத்திகொள்கின்றனர். இன்னும் சில சபைகளில் வாலிப பெண்களே தங்களுக்கு பிடித்;தமானவர்கள் அல்லது நன்கு அழகுள்ள, நன்கு பாடல் பாடக்கூடிய, திறமையுள்ள வாலிபரைஃஉதவி ஊழியர்களை குறித்து ~தேவன் எனக்கு அவரை சொப்பனத்தில் (தரிசனத்தில்) காண்பித்தார் அவரே எனக்கு ஏற்ற துணை| என்று அவர்களுடய வாழ்க்கையை சீர்குலைத்த சம்பவங்களும் ஏராளமாக உண்டு. வாலிபர் சிலரூம் ~தேவன் தனக்கு ஏற்ற துணையை ஏற்படுத்துவதை விட தனக்குத் தானே ஏற்ற துணையை தேர்ந்;தெடுத்துக் கொள்வதில் முக்கியத்துவம் காட்டுகின்றனர். இதில் அநேகரின் நிலை வருத்தத்திலும், சஞ்சலத்திலும்;, இறுதியில் திருமண விவாகரத்திலும் கூட கொண்டு போய்விடுகிறது.
ஏற்ற துணை வேண்டும் என்கிற கரிசனையோடு தேவ சமூகத்தில் காத்திருப்பதை வி;ட, தனக்கு இஷ்டமான துணையை தேடுவதில் அதிக அக்கரைகாட்டுவதே இத்தகைய தோல்விகளுக்கு முக்கிய காரணமாய் இருக்கிறது.
வாலிபரே!
எனக்கு தெரிந்த போதகர் ஒருவர் இப்படி சொல்வதுண்டு… ‘தம்பி நீ திருமணம் செய்ய போகும் பெண் புறம்பான அழகில் எப்படிப்பட்டவளாய் இருப்பினும் உன் கண்களுக்கு அதிக அழகுள்ளவளாய் இருக்க நீ ஜெபிப்பது அவசியம்” என்று. அழகான மனைவி அல்லது கணவன் அமைவதை விட தேவன் நமக்காக ஏற்படுத்தி தந்த சரியான, ஏற்ற துணை நம் கண்களுக்கு அழகாய் காணப்படுவதே சிறந்தது.! ‘அதுவே தேவ சமாதானத்தையும், சந்தோஷத்தையும் இல்லற வாழ்வில் என்றும் தங்கவைக்கும்.”
எனவே, உங்களுடைய வாழ்க்கை துணைக்காக தேவ சமூகத்தில் காத்திருப்பது அவசியம், அப்படி காத்திருக்கும் போது அழகுள்ள, அந்தஸ்துள்ள, படிப்புள்ள துணைக்காக ஜெபத்தில் முக்கியதுவம் கொடுப்பதை விட ஏற்ற துணைக்காய் ஜெபிப்பது நல்லது. தேவன் ஏற்ற வேளையில் ஏற்ற துணையை ஆதாமுக்கு கொடுத்தது போலவே அவரை சார்ந்திருப்பவர்களுக்கூம் அப்படி செய்ய போதுமானவரே.
மேலும் தேவன் ஏற்ற துணையை ஏற்படுத்துவார் என்பதை குறித்து பார்க்கும் போது, தேவனின் செயல் இப்படி, இப்படித்தான் இருக்கும் என்று நம்மால் மிக துல்லியமாக வரையறுக்க முடியாது! ஆனால் ஏற்ற துணையை தேவன் உனக்கு ஏற்ப்படுத்தி தரும்போது அது ஆவிக்குரிய பெற்றோரினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும், திருமண ஆயத்தம், ஒழுங்கு இவை எல்லாவற்றிலும் தேவ-கரம் இருப்பதை உணரவும் முடியும். ஆக, திருமணத்தில் தேவையில்லாத பிரச்சனைகளின் மத்தியிலும் எல்லா புத்திக்கும் மேலான அந்த தேவ சமாதானம் (பிலி. 4:7) உங்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும்.
- Rufus Samuel
0 Comments