Header Ads Widget

Responsive Advertisement

ஈஸ்டர் சொல்லும் செய்தி என்ன?


நான் மிகவும் கொண்டாட விரும்புகிற ஒரு காரியம், ஆதிச் சபை அதிகமாய் பிரசங்கித்த ஒரு காரியம் திருச்சபை வரலாற்றில் ஆரம்ப அத்தியாயத்திற்கான அஸ்திபாரம் என்று உயிர்த்தெழுதலைக் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம். உயிர்த்தெழுதலின் செய்தி என்ன? அது வெறும் கொண்டாட்டமா? அல்லது வெறும் வரலாற்று நிகழ்ச்சிதானா? அல்லது கட்டுக் கதையா? நாம் இதிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய செய்தி என்ன?



ஆண்டவராகிய இயேசு ஒரு மனிதனாக மனுக்குலத்தில் இரட்சிப்புக்காக இந்த உலகில் வந்தார். மீட்பின் திட்டத்தை நிறைவேற்ற அவர் கல்வாரி சிலுவையில் மரித்தார். மேலும் பல தீர்க்கதரிசனங்களின் படியே தாம் சொன்னபடியே அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். கல்லறை காவல் பண்ணப்பட்டிருந்தாலும் அவர் உயிர்த்தெழும் போது எதுவும் அந்த நிகழ்வை தடை செய்ய முடிய வில்லை. தேவனே அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். உயிர்த்தெழுந்த இயேசு தம் சீடர்களுக்கு காட்சியளித்து நாற்பது நாளள்வும் அவர்களுடன் இருந்து பல காரியங்களை போதித்தார். பின்பு பிதாவின் வாக்குதத்தமாகிய பரிசுத்த ஆவியை பெற்ற 120 சீடர்கள் அதன்பின்பு செய்த ஒவ்வொரு பிரசங்கத்திலும் அவர்களின் ஒவ்வொரு பகுதியிலும் உயிர்த்தெழுதல் ஆக்ரமித்திருந்தது. அது அவர்களின் பேச்சாக மட்டுமலாது உயிர் மூச்சாகவே இருந்தது. தைரியமாக எவர் முன்பாகவும் அவர்கள் ஆண்டவரின் உயிர்த்தெழுதலைக் குறித்து சாட்சியிட்டனர். இதை நாம் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் வாசிக்கலாம். மேலும் அதுவரைக்கும் ஆறாம் நாளாகிய சனிக்கிழமையன்று ஓய்வு நாளாக ஆசரித்து வந்த அக்கூட்டம் கிறிஸ்த்வர்கள் ஆண்டவர் உயிர்த்தெழுந்த தினத்தை முக்கியப்படுத்து ஞாயிற்று கிழமையை பரிசுத்தமான நாளாக்கி கர்த்தரின் சந்நிதியில் கூடினர். இன்று கிட்ட தட்ட உலகமெங்கிலும் ஞாயிற்று கிழமை ஹாலி டே(holiday) ஆகவும் கிறிஸ்தவர்களுக்கு ஹோலி டே(holy day) ஆகவும் இருக்கிறது.தேவனுக்கே மகிமை. ஈஸ்டர் வரலாறு ஈஸ்டர் என்ற பதம் இஸ்டார் என்ற இனப்பெருக்கத்திற்கான தேவதையின் பெயரிலிருந்து வந்தது என்பது சற்று ஆச்சரியத்தை நமக்கு தரக் கூடும். நீங்கள் ஈஸ்டர் முட்டை குறித்த விளம்பரங்கள் மற்றும் செய்திகளை பார்த்திருக்கிறீர்களா?. இதற்குக் காரணம் இதுவே. இந்த இஸ்டார் தேவதைக்காக வசந்த கால முடிவில் இன்றைய ஐரோப்பாவில் முற்காலத்தில் ஒரு பண்டிகை கொண்டாடப்பட்டது. நாம் ஈஸ்டர் அனுசரிக்கும் காலமும் ஐரோப்பிய வசந்த காலத்தின் முடிவிலேதான் வருகிறது. ஆதி அப்போஸ்தலர்களுக்கு சுவிஷேசத்தை சொல்வதற்கே நேரம் போதாமலிருந்தது. அவர்கள் மற்ற காரியங்களில் சிக்கிக் கொள்ள விரும்ப வில்லை(அப்.6:4). மேலும் அவர்கள் நாற்பது நாட்கள் உபவாச நாட்களாகவும் ஆசரிக்க வில்லை. இவையெல்லாம் பின் நாட்களில் தான் சபையால் ஆசரிக்கப்பட்டன. என்றாலும் ஆதி திருச்சபை ஆண்டவர் உயிர்த்தெழுந்த தினத்திற்கு முன்பாக மூன்று நாட்களும் முழு உபவாசமிருந்து வந்தனர் என்பதற்கான செய்திகள் வரலாற்றில் நமக்கு கிடைக்கிறது. உயிர்த்தெழுதலால் என்ன பயன்? உயிர்த்தெழுதல் என்பது ஒரு மத நம்பிக்கையாக அல்லாமல் அது வரலாற்று நிகழ்ச்சி என்பது சந்தேகமற விளங்குவதால் கிறிஸ்தவ விசுவாசமானது கண்ணுக்கு தெரியாத கட்டுக் கதையின் மீதல்ல, எல்லாரும் நன்கறிந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சியின் மீதே அமைந்துள்ளது என்று நாம் காலரை தூக்கி சொல்லிக் கொள்கிற சம்ப்வமாக இருக்கிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை எவரும் அந்த காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் மறுத்து கூற முடிய வில்லை. மறுத்துக் கூற முடியாது. எருசலேமில் இன்றும் இருக்கிற கல்லறை அவ்வாறு கேட்பவர்களுக்கு பதில் கூறுகிறது. கிறிஸ்தவனின் வாழ்க்கையில் உயிர்த்தெழுதல் ஆண்டவரின் உயிர்த்தெழுதல் நமக்கு விசுவாசத்தை தருகிறதாக இருக்கிறது. கிறிஸ்து உயிர்த்தெழா விட்டால் உங்கள் விசுவாசம் வீண் என்று பவுல் சொல்லுகிறார். உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்துவின் அனுபவம் மட்டுமல்ல. ஒவ்வொரு கிறிஸ்த்வனின் அனுபவமும் கூட. நான் மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து இங்கு கூற வில்லை. நாம் ஞானஸ்னானம் பெறுகிற போது நடை பெறுகிற காரியத்தைக் கூறுகிறேன். நாம் தண்ணீறில் மூழ்கும் போது அவரின் மரணத்திற்கு உள்ளானவர்களாகி நாம் எழுந்திருக்கும் போது அவரின் உயிர்த்தெழுதலின் சாயலாக் எழுன்கிறோம். நாம் பாவங்களுக்கு மரித்து நீதிக்கு பிழைக்கிறோம். நம்முடைய பழைய மனிதனை சாகடித்து கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய மனிதனாக் மாறுகிறோம். ஞானஸ்னானத்தின் சத்தியம் மிகவும் பிரமாண்டமானதாகும். நீங்கள் இன்னமும் குழந்த ஞானஸ்னானத்தையே விசுவாசித்துக் கொண்டிருக்கிறீர்களா. அது சரியான அனுபவம் என்று இல்லையென்று நானல்ல வேதம் கூறுகிறது விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெறுகிறவன் இரட்சிக்கப்படுவான். சரி விசயத்துக்கு வருவோம். நீங்கள் உங்கலின் வாழ்க்கையில் உயிர்த்தெழுதலின் அனுபவத்தை பெற்றிருக்கிறீர்களா? அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு கூறுகிறார்: இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்.அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.(பிலி.3:10- 15) நீங்கள் தேறின சிந்தை உள்ளவர்களாக இருக்கிறீர்களா? இன்று நம்மை நாமே நிதானித்து பர்ப்போம். நீங்கள் பவுல் அப்போஸ்தலனைப் போல கிறிஸ்துவுக்காக காரியங்களை விட்டி விட தயாராக இருக்கிறீர்களா? தைரியமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? ஒரு வேளை உங்கள் குடும்பம் அல்லது சபை பாரம்பரியம் (பெந்தேகோஸ்தே சபையிலும் கூட இது உண்டு), அலது உங்கள் பழக்க வழக்கங்கள் அல்லது நீங்கள் மிகவும் நேசிக்கிற காரியங்கள் இவற்றில் ஏதெனும் நீங்கள் கிறிஸ்துவுக்காக விட வேண்டியிருக்கிறதா? இவை உங்களின் பரம அழைப்பின் பந்தய பொருளுக்கு தடையாக இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களா? உங்களின் பரம அழைப்பை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? கிறிஸ்துவை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? னாம் ஆண்டவரின் உயிர்த்தெழுதலின் வல்லமையை அறிந்து கொள்ள அவர்தாமே நமக்கு அருள் செய்வாராக. ஆமென். இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.

நன்றி: போதகர் அற்புதராஜ் அவர்கள்


Post a Comment

0 Comments