Header Ads Widget

Responsive Advertisement

பைபிள் ஓர் அறிமுகம்


இந்த உலகில் எந்த ஒரு புத்தகத்தையும் முக்கியமானதாக சொல்ல அந்த புத்தகம் தான் எனக்கு பைபிள் என சொல்லக் கேட்டிருகிறீர்களா?. அப்படியானால் அவ்வளவு முக்கியமான புத்தகமா பைபிள் என்ற கேள்வி எழுகிறதா? ஆம் அது ஒரு முக்கியமான புத்தகம் தான். காரணம் அது ஓர் கடவுளின் வார்த்தைகளை அடக்கிய புத்தகம் அதனால் தான், இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா? இதற்கு நீங்கள் பைபிள் யாரால் எப்போது எழுதப்பட்டது என்ற கட்டுரையைப் படித்தால் உங்களுக்கு பதில் கிடைக்கும்.

சரி விசயத்திற்கு வருவோம் பைபிள் என்றால் என்ன பொருள் இதற்கு ஏதோ ஒரு பெரிய விளக்கம் இருப்பதாக பயந்துவிடாதீர்கள். பைபிள் என்றால் புத்தகம் என்று பொருள் அவ்வளவுதான். இதில் சுமார் 66(அறுபத்தாறு) புத்தகங்கள் உள்ளன. இதில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன அவை கிறிஸ்துவுக்கு முன் உள்ள செய்திகளை சொல்லுவது பழைய ஏற்பாடு என வழங்கப்படுகிறது இதில் 39 (முப்பத்து ஒன்பது புத்தகங்கள் உள்ளன கிறிஸ்துவுக்குப் பின் எழுதப்பட்ட புத்தகங்கள் புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகின்றன, இதில்27(இருபத்தேழு) புத்தகங்கள் உள்ளன.

பைபிளில் அப்படி என்ன எழுதியிருக்கிறது என்று தெரியுமா? அவைகள் உலகம் உண்டான விதம் பற்றியும், சாத்தான் பற்றியும், சாத்தானால் செய்யப்படும் பாவம் பற்றியும், அதனால் மக்களின் அழிவு பற்றியும், இந்த அழிவிலிருந்து மக்கள் மீண்டு எப்படி நித்தியமாய் வாழ முடியும் என்பது பற்றியும் தெளிவாக எழுதப்பட்டுள்ளது இதை எப்படி நம்புவது? இன்று நீங்கள் கேட்பது புரிகிறது. அடுத்தடுத்து வரும் அத்யாயங்களில் விரிவாக விளக்குகிறேன் தொடர்ந்து படியுங்கள்.

Post a Comment

2 Comments

  1. வெறும் மதப்பற்று மட்டும் கொண்டு, நீங்கள் வரைந்துள்ளதை நான் வரலாற்று கண்ணோட்டத்தோடு நடுநிலை உண்மைகளோடு எழுதியதை இணைத்துப் பார்க்கிறேன்.

    கருப்பையா

    ReplyDelete
  2. அன்பு நண்பரே உங்கள் மேலான மறுமொழிக்கு மிக்க நன்றி வெறும் மதப்பற்று என் நோக்கமல்ல, கிறிஸ்தவ உண்மைகளை இந்தத் தமிழுலகம் அறியவேண்டும் என்பதே என் நோக்கம் நன்றி...

    ReplyDelete