உலகில் பிறந்த எந்த மனிதனும் சமாதானமாகவும் சகல ஆசீர்வாதங்களோடும் வாழவே படைக்கப்பட்டிருக்கிறான், ஆனால் ஏன் அமைதியின்மை, நிம்மதியில்லா வாழ்க்கை, பொருளாதார சீரழிவு? ஏன் கொலை, கொள்ளை, போர், சமாதாணமின்மை, வறுமை? இதற்கு காரனம் பிசாசு என்று அழைக்கப்படும் தீயசக்தியே காரணம், இது என்ன ஏதோ புதுக்கரடி என நினத்து விடாதீர்கள்... மேலே படியுங்கள் உங்களுக்கு உண்மை தெரியவரும்.
பிசாசு யார்?
ஒரு தனிமனிதனின் வாழ்க்கையை கெட்டுக் குட்டிச்சுவராக்குவது என்ற ஒரே நோக்கத்தோடு களமிரங்கியிருக்கும் ஒரு சக்திதான் பிசாசு, இப்படி மனிதனை கெடுப்பதால் பிசாசுக்கு என்ன நன்மை? கடவுள் தரும் ஆசீர்வாத்த்தைத் தடுத்து கடவுளை மக்கள் குற்றவாளி என்று தீர்க்க வேண்டும் என்பதே பிசாசின் அடிப்படை நோக்கம்.... இதை எப்படி நமக்கு சந்தேகம் வராமல் செய்து உலகத்தில்
விரும்பத்தகாத்தை நிகழ்த்திக் காட்டுகிறான்... விரிவாகப் பார்க்கலாமா?
பிசாசு நம் வாழ்க்கையில் எப்படி தன் திட்ட்த்தை நிறைவேற்றுகிறான்?
(1) சந்தேகத்தை ஏற்படுத்துதல்
பிசாசின் திட்ட்த்தை முதலில் நம் மனதில் ஒரு சந்தேக விதையைத் தூவியே ஆரம்பிக்கிறான். எப்படியெனில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் உண்மை, நேர்மை, விடா முயற்சி, கடின உழைப்பு, ஆகியவற்றின் மீது நம்பிக்கையிழக்க வைக்கிறான். அதாவது நேர்மையாக இருந்தால் முன்னேற முடியாது என்ற சந்தேக விதையைத் தூவுகிறான்.
(2) தீமையின் மீது நாட்டம் ஏற்படுத்துதல்
சந்தேக விதை நம்மை அறியாமல் வேர்விட ஆரம்பிக்கும் போது, நல்ல விசயங்கள் அல்லாத தீமைகளான பொய்சொல்லுதல், மற்றவர்களை ஏமாற்றுதல், திருடுதல், கொலை செய்தல், போன்ற பிற்போக்கான எண்ணங்களுக்கு நம் மனதை திசை திருப்புகிறான், நாம் மனதில் இத்தகைய திட்டங்களுக்கு அனுமதி கொடுக்க ஆரபித்தவுடனே பிசாசு தன் திட்ட்த்தில் பாதி வெற்றி பெற்று விடுகிறான், பிசாசு செய்யும் அடுத்த கட்டங்கள் நாம் ஏற்கெனவே அறிந்த ஒன்றுதான் என்றாலும் ஒரு வித்தியாசமான புதிய நோக்கில் நாம் அதைப் பார்ப்போம்.
(3) பின் விளைவுகள் பற்றிய மாயை
தீமையான பாதை தீமைதான் கொண்டுவரும் என்பது நாம் எல்லோரும் அறிந்த்தே, ஆனால் பிசாசு தீமையான வழியில் சென்றால் மட்டுமே நன்மையைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற மன நிலைக்கு நம்மை இழுத்துச் செல்லுவான், இது மட்டுமல்லாமல் நீ தவறு செய்வதால் மாட்டிக்கொள்ளப் போவதில்லை மாறாக நீ நன்மையும் இன்பமுமே அடையப்போகிறாய் என்ற போலியான மாயையை உருவாக்கி தவறு செய்வதை ஊக்குவிப்பான். ஆனால் உண்மை இதற்கு முற்றிலும் மாறானது
(4) பிசாசின் முழுவெற்றி
இதன் பிறகுதான் பிசாசு தன் வெற்றியை முழுமையாக்குகிறான், அதாவது நம்மை தவறில் வீழ்த்துகிறான், ஆனால் அவன் சொன்ன பொய் வெட்ட வெளிச்சமாகிறது, தீமையான வழியின் மூலம் நாம் செய்த ஏமாற்றுதல், திருடுதல், கொலை, கொள்ளை, போன்றவற்றினால், நமக்கு கடவுள் கொடுத்த ஆசீர்வாதங்களையும் இழந்து, சாபத்தையும் நிம்மதியற்ற வாழ்க்கையையும் மட்டுமே பெற்றுக்கொள்கிறோம், மேலும் இந்த பாவம் நம் குழந்தைகள் மற்றும் நம் சந்த்திக்கும் பரவும்,
இது மட்டுமல்லாமல் உலகரீதியான அவமான்ங்களையும் நாம் இந்த தீமையான செயல்களின் மூலம் பெற்றுக்கொள்கிறோம்....
(5) அப்படியானால் இந்தத் தீமைகளைவிட்டு விலகுவது எப்படி
அன்பானவர்களே இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் நானும் கூட இப்படிப்பட்ட பிசாசின் சூழ்ச்சியில் மாட்டிகொண்டிருக்கலாம், பிசாசு நம்மைக்காட்டிலும் பலத்தவன், அவனை எதிர்க்கொள்வது என்பது மிகவும் கடினமான காரியம், நம்முடைய சுய பெலத்தினால் பிசாசை எதிர்க்கொள்வது முடியாத காரியம், ஆனால் எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரான [எபி-4:15 ] இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியானவரைப் நாம் பெற்றுக்கொண்டால் இந்த தீமைகளை விட்டு விலகி பிசாசை வெற்றி கொள்ள முடியும்....
1 Comments
This IS first times am see tamil web characteristic Satan
ReplyDeletereally i think about how to capture our hearts in panic times,its very really useful thank god
YOU CAN DO GREAT THINGS BCOZ LORD IS WITH YOU ALL TIMES
GOD BLESS YOU MY DEAR BRO