'தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி' என்று பெரியார் அவர்கள் சொன்னதாகக் கேள்வி அவர் என்ன, சூழ்னிலையில் சொன்னாரோ எனக்குத் தெரியாது, ஆனால் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தமிழ் மொழி நடையைப் நீங்கள் ஒருவேளை படிக்க நேருமானால் நீங்களும் அப்படித்தான் சொல்வீர்கள் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்... நான் எதோ தமிழன்னையை கொச்சைப்படுத்துவதாக யாரும் நினைத்துவிடவேண்டாம்,
உதாரனமாக:
அயிசூரியமுடைத்தனயிருக்கிறயதெருமனுஷனௌணடயிருந்தனஅவனசகலததுகளையுமவிலையெறபபெததபிடவைகளையுமதரிசசிக்கெணடுஅனுதினமுமசநததெஷபபடடுபிறுதபிசசுககொனடிருநதன
இப்படித்தான் தமிழ் இருந்த்து அதாவது மெய் எழுத்துக்கள் மேல் புள்ளி (க்,ங்)இல்லாமலும் வார்த்தகளுக்கு இடையே இடைவெளி இல்லாமலும் வாக்கியக்குறி இல்லாமலும் (கெ, கே, கொ, கோ) போன்ற எழுத்துக்களில் உள்ள நெடில் வேறுபாடுகள் இல்லாமலும் இருந்தது, இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் எழுத்துக்களின் பொதுவான வடிவம் என்ற தெளிவான வடிவம் இல்லாமல்
அவரவர் கையெழுத்து பழக்கத்திற்குத் தக்க வடிவிலேயே தமிழ் இருந்தது,
இப்போது நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் மொழி நடை எழுத்துக்கள், மற்றும் எழுத்துக்களின் அச்சு வடிவம் ஆகியவை தமிழில் பைபிளை மொழிபெயர்க்கும் போது மாற்றி அமைக்கப்பட்டவையே,
இதுமட்டுமல்ல தமிழில் முதன்முதலில் சொல்-அகராதி உருவாக்கப்பட்ட்தும் பைபிள் மொழிபெயர்ப்பின் போது தான், அதுமட்டுமல்ல 1500 மொழிகள் வழக்கத்தில் இருக்கும் இந்தியாவில் முதன்முதலில் தமிழிலேயே பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டது, அதுமட்டுமல்ல ஆசிய மொழிகளில் தமிழிலேயே முதன்முதலில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது, அதுமட்டுமல்ல முதன் முதலில் தமிழில் வெளி வந்த அச்சு புத்தகம் பைபிள்தான், இப்படிப்பட்ட சிறப்புக்கள் மிகுந்த தமிழில் மொழியாக்கம் செய்ய சில நூற்றாண்டுகள் சென்றன மேலும் பலர் இந்த அருமையான பனிக்காக தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் செலவிட்டுள்ளனர், இது பற்றிய விருவிருப்பான வரலாற்றுத் தொகுப்பினைத்தான் அடுத்துவரும் பதிவுகளில் பார்க்க இருக்கிறோம் படித்து உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள்,
2 Comments
//1500 மொழிகள் வழக்கத்தில் இருக்கும் இந்தியாவில் முதன்முதலில் தமிழிலேயே பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டது// Great!
ReplyDeleteஆச்சரியமான தகவல்கள்! இன்னும் அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்!!
ReplyDelete