அன்பானவர்களே பாலுனர்ச்சி கடவுளால் கொடுக்கப்பட்டது என்றும், எதற்காகக் கொடுக்கப்பட்டது என்றும் தெளிவாக சென்ற கட்டுரையில் கண்டோம், இன்று அனைவராலும் சாதாரணமாகக் கருதப்படும் ஒரு காரியத்தைக்குறித்து வேதாகம அடிப்படையில் ஆராய்வோம்,
இன்று எதிபாலரின் அழகை ரசிப்பது தவறில்லை என்ற நிலை நிலவுகிறது, இது சரியானதுதான், இறைவன் படைத்த படைப்பின் அழகை இரசிப்பதில் தவறில்லை தான், ஆனால் அது வெறும் மலர்கள் அருவிகளை இரசிப்பதைப்போல எந்த இச்சைகளும் இல்லாமல் இருக்கும் போது அது பாவம் இல்லை என்று வேதம் கூறுகிறது (மத்தேயு 5;28) இதை பாவம் என்று கூட சொல்லாமல் விபச்சாரத்திற்கேதுவான பாவம் என்று தெளிவாகச் சொல்லுகிறது.
அப்படியெனில் எதிர்பாலரைபார்க்கவே கூடாதா?
பார்க்கவே கூடாது என்று சொல்லவில்லை, ஆனால் இச்சையோடு பார்க்ககூடாது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது
இச்சைஎன்றால் என்ன?
முதலில் இச்சை எப்படி பாவமாகும்? என்று பார்ப்போம், பத்துக்கட்டளைகளில் ஒன்று "இச்சியாதிருப்பாயாக" எனவே இச்சை என்பது சாத்தானின் ஆயுதம் எனபதை அறிந்து கொள்ளலாம், இந்த கண்களின் இச்சையை எப்படி பாவமாக பிசாசு மாற்றுகிறான் என்று வேதம் மிகத்தெளிவாக எச்சரிக்கிறது பார்ப்பொம்,
ஆதியாகமம் 3; 6 ஐ வாசித்துப் பாருங்கள். ஏவாள் விலக்கப்பட்ட கனியை பார்த்து இரசித்திருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை மாறாக "அவள் அக்கனியைப் பார்த்து" (பார்த்து இரசித்தல்) "புசிப்பதற்கு நல்லதென்று அறிந்து" (அந்த பழம் கடவுள் தனக்கு சாப்பிடக் கொடுக்கப்பட்டது அல்ல என்ற உண்மையை அவள் நினைவிலிருந்தும் சிந்தனையிலிருந்தும் எவ்வளாவு தந்திரமாக சாத்தான் எடுத்துவிட்டான் பாருங்கள், இப்படித்தான் பாலுணர்விலும் சாத்தான் விளையாடுகிறான், தனக்கு விலக்கப்பட்ட (சித்தமில்லாத) எதிர்பாலர் மேல் இச்சித்து பிரச்சனையில் மாட்டிக்கொள்கின்றனர், மேலும் சாத்தான் ஏவாளிடம் இதோடு நின்று விடுவதில்லை மாறாக; அந்த வசனத்தில் அடுத்த வார்த்தையை கவனித்துப்பாருங்கள்....."புத்தியைத் தெளிவிக்கத்தக்கது என ஆறிந்து" ஆண்டவர் நமக்கு புத்தியை ஏற்கெனவே தெளியவைத்து விட்டார் எனபதை மறந்து (ஆம் பிரியாமானவர்களே அந்த குறிப்பிட்ட எதிர்பாலரைத் திருமணம் செய்தால் மட்டுமே நான் மகிழ்ச்சியாக இருப்பேன், ( கடவுள் நமக்காக ஒரு துனையைப்(ஆதி.2;18) படைத்திருக்கிறார் என்பதை மறந்து) என்ற தவறான ஓர் எண்ணத்தையும் அந்த இச்சையினூடாய் நம் மனதிற்குள் நம்மையும் அறியாமல் செலுத்திவிடுகிறான்). இந்த எண்ணம் நமக்கு செயல்வடிவம் பெறும்போது நாம் பாவத்தில் விழுகிறோம் இதையும் வேதம் அழகாக சொல்லுகிறது (யாக்கோபு 1;15) வாசித்துப் பாருங்கள் இச்சை பாவத்தை அடைகிறது பாவம் மரணத்தை விளைவிக்கிறது ( தற்கொலை, கொலை, கருசிதைப்பு,)
இது மட்டுமல்ல சாத்தானின் நோக்கம் இப்படி பாவத்தில் விழ வைத்து உங்களை தேவனுடைய அன்பிலிருந்து விலக்கி அவருடைய சாபத்திற்கு ஆளக்குவது தான். ஆகவே எச்சரிக்கையாய் இருங்கள்.
சரி இப்படிப் பட்ட சிக்கலில் சிக்காமல் இருப்பது எப்படி என்று அடுத்து வரும் கட்டுரைகளில் விரிவாகப் பார்ப்போம் காத்திருங்கள்.....

0 Comments