Header Ads Widget

Responsive Advertisement

சென்னையில் இப்படியும் ஒரு சபை..!

இன்று காலை நண்பர் ஒருவரது வலை தளத்தில் கண்டது, மனபாரப்பட்டதால் நானும் பதித்துள்ளேன்.......
சென்னையில் இப்படியும் ஒரு சபை..! 
நண்பர்களே, அண்மையில் சென்னைத் துறைமுகத்தின் சுற்றுச் சுவரைச் சுற்றிலும் வாழும் குடிசைப்பகுதி மக்களிடையே ஊழியத்துக்காக சென்றிருந்தேன்; சத்யா நகர்  எனப்படும் அந்த பகுதி போர் நினைவு சின்னம் மற்றும் தீவுத் திடல் எதிரில் அமைந்துள்ளது;

அங்கு கடந்த ஆறு வருடங்களாக நடந்த ஊழியத்தின் பலனாக சுமார் 300 குடும்பங்கள் ஆதாயம் செய்யப்பட்டது; அவர்களை உற்சாகப்படுத்த வாரா வாரம் ஆராதனைக்குப் பிறகு உணவு, வருடாந்தர கிறிஸ்மஸ் மற்றும் குழந்தைகள் (VBS) நிகழ்ச்சிகளின் போது பரிசுப் பொருட்கள், விருந்து என கடன் வாங்கி அந்த ஊழியர் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்;
இந்த நிலையில் அந்த பகுதி மக்கள் சேர்ந்து போராடி துறைமுகத்தின் சுவர் ஓரமாக குப்பை கொட்டி வந்த பாழான இடத்தை சபை கட்டிக்கொள்ள இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள்; அதில் ஊழியர் மிகவும் சிரமப்பட்டு சுமார் 300 பேர் அமர்ந்து ஆராதிக்கக் கூடிய ஆராதனை ஸ்தலத்தைக் கட்டியுள்ளார்; அதற்காக அந்த ஊர் தலைவர் மனைவியிடம் ரூபாய்.50,000/@15%வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்; அதற்கு ஒரே முறை வட்டி பாக்கியாக ரூபாய்.20,000/ செலுத்திய பிறகு அசல் பணத்தைக் கொடுத்து தீர்க்கமுடியாததால் சபையை பூட்டிவிட்டனர்;

ஊழியரோ வேறு பல கடன்களும் சேர ஊரைவிட்டும் வீட்டைவிட்டும் எங்கோ போய்விட்டார்; இந்த நிலையில் சபைக்கும் பூட்டு போடப்பட்டு விட்டதால் மக்கள் ஆராதிக்கமுடியாமல் கடந்த ஆறு மாதங்களாக தவித்துபோயினர்; கடன்கொடுத்தவர்கள் மனமிரங்கி மீண்டும் கெடு வைத்து சாவியைக் கொடுத்துள்ளனர்;


தற்போது பேசி முடிக்கப்பட்ட மிகக் குறைந்த கால அவகாசத்தில்-வட்டியும் முதலாக செலுத்தித் தீர வேண்டிய பணம் ரூபாய்.80,000/- இதுவும் சுமார் 1.45 லட்சத்திலிருந்து இறங்கி வந்த தொகையாகும்; அதாவது ரூபாய்.50,000/@15%வட்டிக்கு சுமார் மூன்று வருட வட்டியுடன் கூடிய கடன் தொகையாகும்;
இதை வாசிக்கும் நண்பர்கள் விரும்பினால் ஊழியரின் மனைவியான சகோதரி சௌந்தர மேரி அவர்களைத் தொடர்பு கொண்டு ஆறுதலும் தைரியமும் இயன்ற உதவிகளும் செய்ய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன்; 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..!

தொடர்புக்கு: 9600102476


Post a Comment

3 Comments

  1. எனது தளத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி,நண்பரே;
    மேலும் எனது கட்டுரையினை மறுப(ம)திப்பு செய்ததற்கும் நன்றிகள்;

    உங்களது தள வரைவு(Template)நன்றாக இருக்கிறது;அது போன்று வித்தியாசமாக அமைத்திட ஏதேனும் ஆலோசனைகள் தரமுடியுமா?

    "chillsam"
    http://chillsams.blogspot.com/2009/12/blog-post.html

    ReplyDelete
  2. நன்றி நண்பரே

    ReplyDelete
  3. படித்தவுடன் கண்கள் பனித்தது பதித்த சகோதரர் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete