அன்பானவர்களே, மிக நுட்பமான விசயங்களை நாம் ஆராய்வதற்கு முன்பு நாம் நாம் தினமும் சந்திக்கும் மிகச் சாதாரணமான காரியங்களைக் கொண்டு நாம் இன்று பரினாமக் கொள்கையினை ஆய்வு செய்யலாம். என்னுடைய அனுபவங்களையே நான் இங்கே ஆய்வு செய்கிறேன்.
விலங்குகள் தோற்றம் அடிப்படியிலான ஆய்வு
நான் சுமார் 8 அல்லது 10 வயது இருக்கும் போது, நாங்கள் ஒரு நாய் குட்டி ஒன்றை வளர்த்து வந்தோம், அந்த நாய் என்னோடு மிகவும் பாசமாக இருக்கும், குழைந்து கொண்டு வந்து எதேதோ தன் மொழியில் பேசி, தன் அனபைக் கூறும், அப்போது அந்த நாயை கவனித்த போது; எனக்குள் பல கேள்விகள் தோன்றின. இந்த நாய்க்கு மனிதர்களுக்கு இருக்கும் உறுப்புகளான முகம், காதுகள், மூக்கு, கண்கள், என அனைத்தும் சிறு சிறு மாற்றங்களுடன் இருக்கிறதே, இந்த நாய் மட்டுமல்ல, பூனை, ஆடு, மாடு, கழுதை, என எல்லாமே, தங்கள் உருவங்களில் ஒரு சில மாற்றங்களோடு, மேற்சொன்ன அவயவங்களைக் கொண்டு இருக்கின்றனவே ஏன்? என்று தோண்றியது, இது என் மனதுக்குள் எப்போதெல்லாம் இந்த விலங்குகளைப் பார்க்கின்றேனோ அப்போதெல்லாம் என் மனம் அந்த இரகசியத்தை அறிந்து கொள்ளத் துடித்தது
சில ஆண்டுகள் கழித்து நான் ஆறாம் வகுப்பு படிக்கையில் அறிவியல் பாடத்தில் சார்லஸ் டார்வினின் பரினாமக் கொள்கை பற்றி அறிந்து கொண்டபோது, எனக்கு இதற்கான விடை எனக்குக் கொடுக்கப்பட்டது,
தாவரங்களின் தன்மை அடிப்படியிலான ஆய்வு
நான் சிறுவயது முதல் சிறு சிறு தாவரங்களை சேகரித்து, அவைகளை மிகவும் நேசித்து வளர்த்து வருவேன், நாங்கள் அப்போது வசித்த பகுதியில் இருந்த சின்னச் சின்ன தோழர்களும், தோழிகளும், விடுமுறைக்காலங்களில், தோட்டம் அமைந்திருக்கும் வீடுகளை கூட்டமாக முற்றுகையிட்டு பூக்களையும், செடிகளின் அழகையும் ஆராய்வோம், மேலும் அந்த வீட்டு உரிமையாளரிடம் எங்களைக் கவர்ந்த செடிகளின் நாற்ருக்களைக் கேட்டுப் பெறுவோம், அவைகளை எங்கள் வீட்டுத் தோட்டங்களில் வைத்து, யார் செடி செழிப்பாக வளர்கிறது? யார் செடியில் அதிகம் பூப் பூத்திருக்கிறது என்று எங்களுக்குள்ளாகப் போட்டி நடத்திக்கொள்வோம், மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் அவை,
இந்த ஆர்வம், நாளுக்கு நாள் வளர்ந்தது, பிறகு தாவரங்கள் விற்கும் பண்ணைகளுக்குச் சென்று தென்னை வாழை, முருங்கை, என வகை வகையான மரங்களை வாங்கி வந்து ஆர்வமாக வளர்த்துவேன், இதற்கு என் தந்தை ஊக்கமும் உதவியும் செய்வார்,
சரி இப்போது விசயத்திற்கு வருவோம், நான் அப்படி வாங்கி வளர்த்த செடிகளில் ஒட்டு வகைகளும் உண்டு, அவை சப்போட்டா, ரோஜா, மல்லி, கொய்யா ஆகியவை, நான் முதன் முதலாக ஒட்டுச் செடிகள் வாங்கி வைத்த போது எனக்கு அவைகளை எப்படி நட வேண்டும் என்று தெரியாததால் செடிகளின் ஒட்டு மன்னுக்கு வெளியே இருக்கும் படி நட்டு விட்டேன், செடிகள் நன்றாக செழித்து வளர்ந்தன, ஆனால் சில மாதங்களில் ஒரு செடியாக வளர்ந்து வந்த ஒட்டுச் செடியின் வேர்ப் பகுதிச் செடியின் ஒட்டுக்குக் கீழ் இருக்கும் பாகத்திலிருந்து புதியதாகக் குறுத்துகள் வந்து அந்தச் செடி முற்றிலும் மாறுபட்ட வகையைச் சார்ந்ததாக அந்தக் குறுத்து வளர்ந்தது, குறிப்பாக சப்போட்டா மரத்தைப் பற்றி எழுதியே ஆக வேண்டும், ஆம் அதன் வேர்ப்பகுதியில் இருந்து வளர்ந்த புதியகிளை பாலை மரத்தின் கிளை எனக்கு மிகவும் கோபமாகிவிட்டது நர்சரி நடத்தும் அந்த சகோதரியிடம் போய்க் கேட்டபோது, விரைவாகக் காய்க்க வேண்டும் என்பதற்காகச் சப்போட்டாவை பாலைச் செடியில் ஒட்டுக்கட்டுவதாக அந்த சகோதரி சொன்னார், மேலும் நான் அந்தச் செடியை நட்டியதில் நடந்த தவறு பற்றியும், ஒட்டுச் செடிகளை ஒட்டுக்க்கட்டப்பட்ட பகுதி மண்ணில் நன்றாகப் புதையும் வகையில் நட்டால் இந்த பிரச்சனை வராது என்று சொன்னார்,
மேலும் அந்த ஒட்டுச்செடியின் விதைகளை நான் சேகரித்து என் நண்பர்களது தோட்டத்தில் நட்டபோது, அது ஒட்டுக்கட்டப்பட்ட செடி போல அல்லாமல் மிகச் சாதரண வீரியம் உள்ளதாக்வே இருந்தது, பின்பு ஒட்டுக்கட்டப்பட்ட செடியின் வீரியம் அந்தச் செடியில் மட்டுமே வீரியத்தை உண்டாக்கும் என்றும், அந்தக் காய்க்கும் திறன் மரபனு மூலம் விதைகளில் பரவாது என்றும், மீண்டும் ஒட்டுக் கட்டிய செடிகளை வாங்கி நட்டால் மட்டுமே அந்த காய்க்கும் வீரியம் வரும் என்றும் அறிந்து கொண்டேன், இந்த படிப்பினை எனக்கு ஏதோ ஒரு விசயத்தை மவுனமாக எனக்குச் சொல்லிக்கொண்டிருந்தது.
கரப்பான் பூச்சிப் பாடம்
12 ஆம் வகுப்புப் படிக்கும் போது கரப்பான் பூச்சி பற்றிய பாடத்தில், இந்த பூச்சி உருவான நாளில் இருந்து எந்த விதமான மாற்றமும் அடையாமல், அதாவது பரினாம வளர்ச்சியடையாமல், இருக்கிறது என்று ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார், இதைக்கேட்ட எனக்கு மிகவும் அதிர்ச்சி அப்படியானால் அது அமீபா பாக்டீரியா போன்று மிக எளிமையான உயிரினாமாக அல்லவா இருக்கவேண்டும்? எப்படி கண்கள், காது, உணர்கொம்புகள், நெஞ்சு, வயிறு, இனப்பெருக்க உறுப்புகள், ஆண் பெண் வித்தியாசம்?,(இப்போதும் கரப்பான் பூச்சியைப் பற்றிய பாடம் மேல் நிலைப் பள்ளியின் விலங்கியல் பாடப் பிரிவில் கறிபிக்கப் படுகிறது) பரினாம வளர்ச்சியின் உச்சம் என்று நாம் சொல்லும் மனிதனுடைய சிக்கலான உறுப்புகள், எப்படி பரினாம வளர்ச்சியில்லாத பூச்சி என்று அறிவியலில் சொல்லப்படும் கரப்பான் பூச்சியில் வந்தது எப்படி?
அப்படியானால் ஒரு செல் உயிரிகளான அமிபா, பாக்டிரியாக்களில் இருந்து கரப்பான் பூச்சி தோன்றவில்லை என்றால்? மனிதன் மட்டும் எப்படி அமீபா பாக்டீரியா போன்ற ஒரு செல் உயிரினத்தில் இருந்து தோன்ற முடியும்? என்று ஆசிரியரைக் கேட்டேன். அவர் எனக்கு சொன்ன பதில் திருப்தியாக இல்லை, இந்த கேள்வி எனக்கு இடரலாக இருன்தாலும், நான் பரினாமக் கொளையினை நம்பிக்கொண்டுதான் இருந்தேன்,
பைபிள் விடை கொடுத்தது
காரணம் நான் பைபிளைப் படிக்கவில்லை, அப்போதெல்லாம் பைபிள் யாரோ எப்போதோ எழுதிய கட்டுக்கதை தான் பைபிள் என்று உளரிக்கொண்டிருன்தேன், ஆனால் நான் கிறிஸ்துவை முழுமனதோடு ஏற்றுக்கொண்ட போது, பைபிளை வாசிக்க ஆரம்பித்த போது, சில வருடங்களாக எனக்குள் இருந்த அந்த முரண்பட்ட கேள்விக்கு பைபிள் மூலமாக ஆவியானவர், எனக்கு பதில் சொன்னார்,
எப்படி?
விலங்குகளின் தோற்ற அமைப்பு பரினாமத்தால் உண்டானது அல்ல, அவைகள் தோற்ற ஒற்றுமையோடு இருக்கக் காரணம்; இந்த பூமியில் அவைகள் வாழ அந்த உறுப்புகள் அவசியம், ஆகவேதான் இந்தத் தோற்ற ஒற்றுமை,
எப்படி எனில் ஒரு மீனைப் பிடித்துத் தரையில் விட்டால் அதற்கு காற்றை உட்கொள்ளும் நுரையீரல் இல்லாததால் விரைவில் இறந்து விடும், அதேபோல ஒரு பூனையைப் பிடித்து நீரில் மூழ்கடித்தால் அது தண்னீரில் சுவாசிக்க முடியாமல் இறந்து விடும், அதே போல ஒரு செடியை நிலத்திலிருந்து பிடிங்கி தரையில் போட்டால் அது விலங்குகள் போல உணவை தேடிசெல்ல முடியாமல் இறந்து விடுகிறது, அது போல ஒரு விலங்கைப் பிடித்துச் செடியைப் போல கால்களைப் புதைத்து நட்டி வைத்தால், அந்த விலங்கின் காலில் வேர் தோன்றி அந்த விலங்குக்கு உணவை ஈட்டிக்கொடுப்பதில்லை மாறாக, சில நாட்களிலேயே தாகத்தாலும் பட்டினியாலும், மாண்டு விடுகின்றன, இப்படி ஒரு சில நாட்கள் கூட மாற்றுச் சூழ்னிலையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் விலங்குகளும் தாவரங்களும் இறந்து அழுகி மக்கிப் போய்விடும் போது எப்படி இலட்சக்கணக்கான ஆண்டுகளில் மாற்றம் அடைந்திருக்க முடியும்?
அதே போல ஒட்டுச் செடி தன்னிடம் உள்ள தன்மையை மாற்றிக்கொள்ளாமல் எப்படி தன் மூதாதைகளின் மரபனுவையுடைய விதைகளை மட்டுமே உருவாக்குகிறது?
இதைத்தான் பைபிள் மிகத்தெளிவாகச் சொல்லுகிறது: ஆதியாகமம் 1:11. இப்படிச் சொல்லுகிறது "தேவன்:பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று." மேலும் இதே அதிகாரத்தில் 25ஆம் வசனம் வரை வாசித்துப்பாருங்கள், உங்களுக்கு கரப்பான் பூச்சி பற்றி அறிவியல் சொல்லும் ஆதாரம் புரியும்,
இனி வரும் பதிவுகள், பைபிள் சொல்லும் படைப்பின் நாட்களுக்கு அறிவியல் ரீதியான ஆதாரங்களை வரும் நாட்களில் ஆராய்வோம், காத்திருங்கள்....
4 Comments
merry christmas and happy newyear brother
ReplyDeletethanking you and wish u the same brother
ReplyDeleteவேற வேலை இருந்த போய் பாருங்க. ஒரே காமெடி.
ReplyDeleteநன்றி சகோதரரே உங்கள் ஆலோசனைக்கு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதித்துக் காத்துக் கொள்வாராக...
ReplyDelete