மூல மொழி சொல்வது என்ன?
வெறுமை என்பது சகலமும் வெறுமை ஆகும், அதாவது வெளிச்சம், சகல உயிரினங்கள், மற்றும் இன்னும் என்னென்ன உண்டோ சகலமும் வெறுமையாக்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையிலிருந்து பூமியைத் தற்போதுள்ள நிலமைக்கு மாற்ற தேவன் ஏழு நாட்கள் எடுத்துக்கொண்டார், இதை அறிவியல் ஆதாரங்களுடன் ஆராயலாம்.
அறிவியலில் தற்காலக் கண்டுபிடிப்புகள்
பூமியின் தோற்றம் அறிவியல் முறையில் உயிர் தோற்றம் பற்றி சொல்லும் போது சுமார் 100 கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக உண்டாகியிருக்கலாம். என்று அனுமானிக்கிறார்கள். இந்த முடிவுக்கு அவர்கள் வருவதற்குக் காரணம்; யுரேனியம் அளவுமுறை, கார்பன் 14 முறைகளைக் கையாண்டு கண்டதாக கூறுகிண்றனர். ஆனால் சமீப காலத்தில் டாக்டர் டேவிட் பி கௌவர் (Dr. David B. Gower, D.sc., Ph.d., F.R.I.C) என்பவர் லண்டனில் கை மருத்துவ மனையில் (Guy's Hospital) பையோ கெமிஸ்ட்ரி துறை பேராசிரியர், இவர் ரேடியோ அலைகள் (Radio metric Dating Method) முறையைக் கையாண்டு பூமியின் வயது 10,000 ஆண்டுகளுக்குள்தான் இருக்கும் என நிரூபித்திருக்கிறார்.
தற்கால உலகத்தின் முதலாம் நாள்
வேதாகமம் பூமியே முதலாவது உருவாக்கப்பட்டதாக சொல்லுகிறது. ஆதியாகமம் முதலாம் அதிகாரம் 3ம் 4ம் வசனத்தில் ”வெளிச்சம் உண்டாகக் கடவது” என்று சொன்னார். உடனே வெளிச்சம் உண்டானதாகப் படிக்கிறோம். ஆனால் நான்காம் நாள் தான் சூரியனும் நிலாவும் உருவாக்கப்பட்டது, என்று வேதாகமம் சொல்லிகிறது அப்படியிருக்க எப்படி வெளிச்சம் உண்டானது? என்று ஆச்சரியம் உண்டாகலாம் அதற்கு பைபிளே நமக்கு விளக்கம் கொடுக்கிறது. தேவனே அங்கே வெளிச்சமாக இருந்தார்(1யோவான் 1;5, வெளி 21;23 வெளி 22;5). இருளையும் வெளிச்சத்தையும் பிரித்தார் அப்போதிருந்து நாள் கணக்கு தொடங்கியது.
சிலர் நாட்கணக்கு எனபது தேவனுடய கணக்கில் பல ஆயிரம் ஆண்டுகள் என்றும், அந்தக் காலகட்டத்தில் பரினாம வளர்ர்சி உண்டாகியிருக்கலாம் என்றும், சொல்லுகிறார்கள். ஆனால் யாத்திரையாகமம் 20ம் அதிகாரம் 8;11ன் படி திட்டமாக அது 24மனி நேரம் கொண்ட ஒரு நாள் என்பது உறுதியாகிறது.
இப்படி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் ஆக்கப்பட்ட பூமி இப்படியாக புதுப்பிக்கப்பட்டது. வரும் நாட்களில் புத்தாக்கம் செய்யப்பட்ட பூமியின் அடுத்த கட்ட ஆரம்ப நாட்களைக் குறித்து அறிவியல் ஆதாரங்களுடன் வரும் நாட்களில் காண்போம் காத்திருங்கள்
2 Comments
http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/21.gif
ReplyDeletehttp://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/21.gif
http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/21.gif
http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/21.gif
http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/21.gif
http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/21.gif
http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/21.gif
அன்பானவர்களே இந்த முதலாம் நாளுக்குறிய ஆதாரங்கள் ”பைபிளின் இரண்டாம் நாளும் அறிவியலும்” என்ற தலைப்பில் தெளிவாக் விளக்கப்பட்டிருக்கிறது படித்து பயன்பெறுங்கள்
ReplyDelete