அவசர காலத்திற்கு அழைப்பதற்கென்று உலகில் பல்வேறு எண்கள் உள்ளன. இந்தியாவில் ஆம்புலன்ஸ் தேவைக்கு 108ம் அவசர போலீஸ் உதவிக்கு 100 போன்ற எண்கள் மிக பிரபலம். இது போல பல எண்கள் உண்டு. அது நமக்கான பிரச்சனையைப் பொறுத்து மாறுபடும். நாட்டுக்கு நாடு இந்த எண்கள் வேறுபடும். உலகமனைத்திற்கும் பொதுவான எண் எதுவும் கிடையாதா? ஆம். இருக்கிறது. அது என்ன?
நம் அனைவரையும் உண்டாக்கிய தேவன் “(ஆபத்துக்காலத்தில்) என்னை நோக்கிக் கூப்பிடு, " என்று சொல்கிறார். நாம் அழைக்கவேண்டிய அவசர எண் 333. என்ன புரியவில்லையா? எரேமியா 33:3 தான் நமது அவசர எண். நாம் அவரை அழைத்தால் அவர் நமக்கு பதில் கொடுத்து நாம் அறியாததுத் எட்டாததுமான காரியங்களை நமக்கு அறிவிப்பார். நம் சூழ்நிலைகளுக்கேற்ப பல அவசர எண்கள் வேதாகமத்தில் உண்டு. அவை கீழே:
*துக்கத்தில்
யோவான் 14 தை அழையுங்கள்!
*மனிதர்கள் விழுத்தாட்டும் போது
சங்கீதம் 27 தை அழையுங்கள்!
*பலன் கொடுக்க விரும்பினால்
யோவான் 15 தை அழையுங்கள்!
*பாவம் செய்துவிட்டால்
சங்கீதம் 51 றை அழையுங்கள்!
*ஆபத்துவேளையில்
சங்கீதம் 91 றை அழையுங்கள்!
*தேவன் தூரமாக இருப்பதாக நினைத்தால்
சங்கீதம் 139 தை அழையுங்கள்!
*விசுவாசத்திற்கு கலங்கம் வந்தால்
எபிரேயர் 11றை அழையுங்கள்!
*தனிமையிலும் பயத்திலும் இருந்தால்
சங்கீதம் 23 றை அழையுங்கள்!
*கசப்பான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டால்
1கொரிந்தியர் 13றை அழையுங்கள்!
*பவுலின் சந்தோஷத்திற்கான இரகசியம்
கொலோ 3:12-17 லை அழையுங்கள்!
*கிறிஸ்தவத்தைப் பற்றிய தெளிவுக்கு
2கொரிந்தியர் 5:15-19 தை அழையுங்கள்!
*வெறுக்கப்பட்டவர்களாக எண்ணினால்
ரோமர் 8:31 றை அழையுங்கள்!
*சமாதானம் இளைப்பாறுதல் தேவையானால்
மத்தேயு 11:25-30 தை அழையுங்கள்!
*வீட்டை விட்டு வெளியே சென்றால்
சங்கீதம் 121றை அழையுங்கள்!
*உங்கள் ஜெபம் சுயத்தை சார்ந்தால்
சங்கீதம் 67 லை அழையுங்கள்!
*பெரிதான அழைப்பு வாய்ப்பு கிடைத்தால்
ஏசாயா 55 தை அழையுங்கள்!
*இலக்கையடைய தைரியம் வேண்டுமானால்
யோசுவா 1 றை அழையுங்கள்!
*சோர்வடைந்தால்
சங்கீதம் 27 லை அழையுங்கள்!
*உங்கள் பை வெறுமையானால்
சங்கீதம் 37 லை அழையுங்கள்!
*மக்களின்மீது நம்பிக்கை இழந்தீர்களாயின்
1கொரிந்தியர் 13 றை அழையுங்கள்!
*மக்கள் கெட்டவர்களாக இருந்தால்
யோவான் 15 தை வாசியுங்கள்!
*வேலைத்தளத்தில் நீங்கள் மட்டந்தட்டப்பட்டால்
சங்கீதம் 126 றை வாசியுங்கள்!
Compiled by Sujanthini
source: http://www.tamilbible.org/blog/
0 Comments