Header Ads Widget

Responsive Advertisement

(01) புனித மார்டின் லூத்தர்

1517ஆம் ஆண்டுஅக்டோபர் 31,திருச்சபையின்மறுமலர்ச்சி மலர்ந்த நாள்!அன்றுதான்,புனித மார்டின் லூத்தர் எனும்ஜெர்மானியத் துறவி,அவரது 95 கோட்பாடுகளை விட்டன்பர்க் தேவாலயக்கதவினில் ஆணியறைந்தார்.அதுவே, உலக வரலாற்றின்மிகப்பெரிய கிறிஸ்தவப்புரட்சியின் ஆணிவேரும்,ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம்வருகைக்கான ஆரம்ப ஒலியலையுமா விளங்கிற்று!

மாமனிதர், டாக்டர் லூத்தர் 1483ஆம் ஆண்டுநவம்பர் 10ஆம் தேதி ஜெர்மனியிலுள்ள ஈல்பன்((Eisleben) எனும் ஊரில் ஜான் லூத்தருக்கும்,மார்கரெட் லூத்தருக்கும் மகனாய்ப் பிறந்தார். அதுஓர் ஏழைக் குடும்பமாயினும், சிறுவன் லூத்தருக்கோ(புனித கொலம்பாவைப்போல) நன்கு பாடும் குரல்இருந்தது. அநேக வேளைகளில் அவரது பாடல்தான்அக்குடும்பத்திற்கு இரவு உணவைச் சம்பாதித்தது.
லூத்தர் பிறந்த 10 ஆண்டுகளுக்குள்ளாகவே ஜான்காபோட் உலகின் புதிய பகுதியைக் கண்டுபிடித்தார்.லூத்தரின் மறுமலர்ச்சிக்குச் சாத்தான் கொணரும்தாக்குதலின் உக்கிரம் ஐரோப்பாவில் பயங்க

ரமாயிருக்கும் என முன்னறிந்த தேவன்தாமே, சீர்திருந்தும் கிறிஸ்தவர்க்கென்று இவ்வாறு புதிய உலகை ஏற்படுத்தினார் எனலாம்.


ஒருமுறை, மின்னலின் தாக்குதலில் மயிரிழையில்தப்பின லூத்தர், துறவியாவேன் எனப் பொருத்தனை செய்து கொண்டார். உலகை வெறுத்து ஒரு துறவியர்இல்லத்தில் தன்னை அடைத்துக் கொள்வதால் தேவனுக்குப் பணிவிடை செய்வதாய் நம்பினார். ஆயினும்,அந்த மடத்தின் கனத்த மதில்களுக்கு தன் உள்ளத்தில் எரியும் இச்சைகளை எழாமல் தடுக்கும் வலுவில்லை என்பதை விரைவில் புரிந்துகொண்டார். சுயக்கட்டுப்பாடு, உபவாசம், உறங்காதிருத்தல், சாட்டையால் தன்னையே அடித்துக்கொள்ளுதல் போன்றமுயற்சிகளும் தனக்குள் சமாதானம் கொண்டுவர இயலாதவை என அறிந்த அவரது உள்ளம் குழம்பித்தவித்தது.


ஒருநாள், மிகவும் தற்செயலாய், அம்மடத்திலுள்ள பாழடைந்த ஒரு பழைய அறையில், ஒரு வேதப் புத்தகத்தைக் கண்டெடுத்தார். ஜெர்மானிய மொழிபெயர்ப்பான அந்த வேதப்புத்தகம், மொழியறிஞர்களே புரிந்துகொள்ளக்கூடிய இலத்தீன் மொழியில் இருந்தது.அதிர்ஷ்டவசமாக, இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் மார்ட்டின் லூத்தர் சிறப்பான புலமைப் பெற்றிருந்தார்.


புத்திசாலியான மார்ட்டின், கற்றுக்கொள்ளும்ஆர்வத்திலும் வேகத்திலும் மற்ற மாணவரைவிடச்சிறந்து விளங்கினார். 1508ஆம் ஆண்டு இறையியல்பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.


1510இல், ஒன்றுமறியாத இளம் துறவியாயிருந்த அவர் ரோமாபுரிக்குச் சென்றார். பரிசுத்த நகரம் என அவருக்குச் சொல்லப்பட்டிருந்த அவ்விடம், உண்மையிலேயே அசுத்த நரகம் என்பதைக் கண்டு கொண்டலூத்தரின் அதிர்ச்சிக்கு அளவேயில்லை. பாவ மன்னிப்புக் கென்று, பிலாத்துவின் ஏணிப்படிகளில் முழங்கால்களினாலேயே ஏறும்போது “விசுவாசத்தினாலேநீதிமான் பிழைப்பான்” என்ற இடிமுழக்கக் குரல்ஒன்றைக்கேட்டார். அந்த நாட்களில், புதிதாய்க் கட்டப்பட்டுக்கொண்டிருந்த புனித பேதுரு பேராலயத்தின் கட்டுமானப்பணிக்கானப் பணத்தேவை மிகவும் பெரிதாயிருந்தது.இதுதான் ‘பாவமன்னிப்புச் சீட்டு’ என்ற பெரிய ஏமாற்றுவேலைக்குக் காரணமாக அமைந்தது. இந்த ரோமாபுரிப் பயணத்தைப் பற்றிப் பின்னாளில் லூத்தர் இவ்வாறு கூறினார்: “நரகம் என்ற ஒன்று இருக்குமானால்,அதின்மேல்தான் ரோமாபுரி கட்டப்பட்டுள்ளது,” எனரோமாபுரியின் தெருக்களில் மக்கள் பேசிக்கொண்டுசெல்வதை என் செவிகளாலேயே கேட்டேன்.

Post a Comment

0 Comments