அன்பானவர்களே இன்று நாம் மிக முக்கியமான காரியத்தை தியானிக்கப்போகிறோம். ஆம் அது மனிதனைப் படைத்ததுதான்.
பைபிளில் ஆதியாகமம்1:27-ல் இது குறித்து நாம் வாசிக்கிறோம். மனிதன் தேவசாயலாகவும், தேவனுடைய ரூபத்தின்படியாகவும், மண்ணால் உருவாக்கப்பட்டான் என்று நாம் காண்கிறோம்.
முதலாவது தேவசாயல் என்ன என்பதைக் குறித்து ஆராய்வோம் தேவனுடைய சாயல் திரித்துவம் ஆகும். தேவன் எப்படி பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று திரியேகராய் இருக்கிறாரோ அப்படியே மனிதனும் உண்டாக்கப்பட்டான். அதாவது ஒரு மனிதன் மாம்சத்தின் படி குமாரனாகவும், ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாக இருக்கும் ஒருவித மின்னோட்டம், ஆவியாகவும், ஆதியாகமம் 2:7ல் சொல்லப்பட்ட படி பிதாவின் அதாவது எங்கும் நிறைந்தவரின் சுவாசம் ஊதப்பட்டவுடன் மனிதன் ஜீவ ஆத்துமாவானான். இதுவே தேவ சாயல் ஆகும்.
தேவரூபம் என்பது மனிதனின் கடவுளின் ரூபத்திற்கொத்த மனிதவடிவம் ஆகும்.
மனிதன் எதற்காக உருவாக்கப்பட்டான்?
இந்த கேள்விக்கான விடை இன்று பெரும்பாலாவர்களுக்குத் தெரிவதில்லை, மனிதன் இந்த பூமியை ஆண்டுகொள்வதற்கு மாத்திரமல்ல(ஆதி 1:28). அவன் உருவாக்கப்பட்ட நோக்கம் நாம் இந்த படைப்பின் இரகசியங்கள் தொடரில் முன்னமே கண்ட சாத்தானானவனை வெட்கப்படுத்தவே மனிதன் இந்த பூமியில் உண்டாக்கப்பட்டான் (தீத்து2:8)
இது எப்படியெனில் உலகத்தில் வந்து விழுந்த சாத்தானால் டைனோசர்கள் போன்ற விலங்குகள் அழிந்த வரலாற்றை முன்னமே நாம் கண்டோம். அதன் பின்பு பூமி மீண்டும் சீறமைக்கப்பட்ட வரலாற்றையும், கண்டுவருகிறோம். அதன் தொடர்ச்சிதான் மனிதனின் சிரிஷ்டிப்பும் ஆகும்.
ஆனால் பூமியில் வந்து விழுந்த அந்த சாத்தான் எங்கேயும் போய்விடவில்லை அவன் பூமி முழுவதும் சுற்றிவருகிறான் என்று வேதம் சொல்லுகிறது( யோபு1:7).
அப்படிப்பட்ட சாத்தான் தேவ சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதனை அனேக தவறுகளுக்கு நம்மை ஆட்படுத்துகிறான்,
பரினாமக் கொள்கை சொல்லும் மனிதனின் உருவாக்கம்
அப்படிப்பட்ட தவறுகளில் ஒன்றுதான் மனிதன் குரங்கிலிருந்து மனிதன் உண்டானான் என்ற கொள்கையும் ஆகும். இதற்கு முந்தின பத்தியைப் படியுங்கள். உங்களுக்கு சாத்தானின் தந்திரங்கள் உங்களுக்கு முழுமையாகப் புரிந்துவிடும்.
அதாவது தேவசாயலான மனிதனை, நீ குரங்கிலிருந்து பிறந்தவன் என்று சொல்லி நம்மை நம்பவைத்து ஏமாற்றியதின் மூலம் தேவசாயலைக் குரங்கின் சாயல் என்று சொல்லிவிட்டான். (இதைப் படிக்கும் பரிணாமக் கொள்கையை ஆதரிப்போர் குரங்குகள் மனிதனாக மாறியிருந்தால், இன்று இருக்கும் குரங்குகள் எதாக இருந்து இன்று குரங்குகளாக மாறின என்று விளக்குவார்களாக).
அப்படியானால் இந்த சாத்தான் யார்? அவன் மனித வாழ்வில் எப்படி இடைபடுகிறான்? அவனை வெல்ல என்ன வழி? இந்த உலகத்தின் முடிவு என்ன? இது போன்ற கேள்விகளுக்கு அடுத்துவரும் பதிவுகளில் விரிவாக ஆராய்வோம் காத்திருங்கள்...............
0 Comments