சில நாட்களுக்கு முன்பு மதியவேளையில் நானும் என் நண்பரும், இளநீர் அருந்துவதற்காக சாலையோரம் கடைவைக்கப்பட்டுள்ள மரத்தின் அடியில் எங்கள் வாகனத்தை நிறுத்தினோம். பின்பு இள நீருக்காக காத்திருந்த வேளையில் என் நண்பருடைய இருசக்கர வாகனத்தின் மீது ஒரு பறவை எச்சமிட்டது. அலுவல் நேரத்தில் நாங்கள் இருந்ததால், நண்பருக்கு அது தர்ம சங்கடத்தை உண்டாக்கியது.
அன்பானவர்களே இன்று இப்படிப்பட்ட உலகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். ஆம் இன்று சாத்தான் நம்முடைய தலையின் மீது பறக்கும் பறவைகள் போல நம்மீது அனேக காமவிகாரமான காரியங்களை நம்மைச் சுற்றிலும் பறக்கவிடுகிறான். அவைகள் மூலம் அசுத்தப்படுத்த முயல்கிறான்,
வேதம் நமக்கு ஒன்றை தெளிவாகச் சொல்லுகிறது ’வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய் பாவஞ்செய்கிறான்.’ (1கொரி6;16) என்று சொல்லுகிறது.
என் நண்பர் பறவையின் எச்சத்தால் கரைபட்டு சங்கடத்தில் நெளிந்ததது போல, அனேகர் இன்று சாத்தானின் அசுத்த வலைகளில் வீழ்ந்து கரைபட்டு நெளிய ஆரம்பிக்கிறார்கள்.
இன்னும் சிலரோ பறவைகள் தங்கள் தலையில் கூடுகட்டி வாழவே அனுமதித்து விட்டார்கள், நான் சாத்தானால் அனுப்பப்பட்ட விபச்சாரம், ஆபாசபடங்கள், ஆபாச உடையணிந்த பெண்கள் போன்ற பறவைகளைச் சொல்லுகிறேன்.
பறவைகளின் எச்சத்தை தண்னீர்கள் மூலம் துடைத்துவிடலாம், ஆனால் காமவிகார எச்சங்கள் நம்மை மயக்கி நம்மை அது சாப்பிட்த் தூண்டும். சாப்பிட ஆரம்பித்தவுடன் தான். நமக்கு சாத்தான் ஏற்படுத்திய மயக்கம் தெளியும். அப்போது இந்த உலகத்தின் முன்னால் அவமானமே நமக்கு மிஞ்சும்.
நம் தலைமேல் பறவைகள் பறப்பதை எப்படித்தடுக்க முடியாதோ அப்படியே நம்மால் சாத்தானால் அனுப்பப்படும் காமவிகார அசுத்தங்களையும் தடுக்க முடியாது.
ஆனால் அவைகளில் இருந்து விலகியோட கடவுள் நமக்கு ஞானத்தைக் கொடுத்திருக்கிறார். வேதமும் இதைத்தான் நமக்குத் தெளிவாகச் சொல்லுகிறது (1கொரி 6:18).
அவைகளை நம் புலன்களால் நுகர ஆரம்பிக்காமல் அதைவிட்டு யோசேப்பைப்போல (ஆதி39:10) விலகியோடி நம் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்வோமாக.... நீதிமொழிகள் 5:19-ல் சொல்லியிருக்கிறபடி அவன் மனைவியின் அங்கங்களே ஒருமனிதனின் பாலுணர்வின் வடிகாலாக இருக்கட்டும்.
உங்களை அழைத்தவர் பரிசுத்தராய் இருப்பதுபோல நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் (1பேதுரு 1:15)
1 Comments
good...
ReplyDelete