உங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன், இந்த பைபிள் அங்கிள் வலைமலர் ஆரம்பிக்கப்பட்டு இந்த மே மாதம் 18ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிறது தேவனுக்கே சகல துதியும் கணமும் மகிமையும் உண்டாகட்டும்.
2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான் இரட்சிக்கப்பட்ட போது எனக்கு கிறிஸ்துவைப் பற்றியோ அல்லது இரட்சிக்கப்பட்ட நண்பர்களோ எனக்கு ஒருவர் கூட கிடையாது. அதுவரை கிறிஸ்தவம் பற்றிய தவறான போதனைகளுக்கு மட்டுமே நான் ஆட்பட்டிருந்தேன். அதனால் அப்போது எனக்கு மனதினுள் கிறிஸ்தவத்தைக் குறித்து ஏராளமான சந்தேகங்கள். தெளிவில்லாத நிலை என்று குழப்பத்தில் இருந்து வந்தேன்.
மெல்ல மெல்ல பைபிள் மற்றும் நான் எப்போதோ வாங்கி பரன் மேல் போட்டிருந்த கிறிஸ்தவ புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். மூன்று மாதங்கள் கழித்து தமிழ் கிறிஸ்தவ மன்றம் (மார்ஸ்மேடை) தளத்தை ஏதேச்சையாக பார்க்க நேர்ந்தது அதில் உள்ள பல்வேறு கட்டுரைகள் என் பல கேள்விகளுக்கு பதிலாக அமைந்தன மேலும், அந்த தளத்தின் உறுப்பினர்கள் பலர் எனக்கு நண்பர்களாயினர். மேலும் பிராத்தனைக்கூட்டங்களுக்கும் செல்ல ஆரம்பித்தேன்.
நாட்கள் செல்லச் செல்ல கிறிஸ்தவத்தைக் குறித்த என் குழப்பங்கள் எல்லாம் தீர்ந்தன. 2008 மார்ச் மாதம் இன்னும் எத்தனையோ பேர் என்னைப் போலவே குழப்பமாக எத்தணை பேர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு நான் அறிந்து கொண்ட செய்திகளை ஏன் ஆதாரங்களோடு எழுதக் கூடாது என்று அழுத்தமாக மணதில் தோண்ற ஆரம்பித்தது.
அந்த எண்ணம் 2008 மே 18 அன்று செயல் வடிவம் பெற்றது. அப்பொது சகோ மருத்துவர் பேதுரு அவர்களின் வலை மலரையும், சகோ ஸ்டெல்லா எனபவரது வலைமலரையும், பார்த்து அது படி ஆரம்பிக்கலாம் என்று எண்னி வோர்ட்பிரஸ்ஸில் என் முதல் தளமான எனபதை ஆரம்பித்தேன். அதன் பிறகு 10 மாதங்கள் அதே வேர்ட் பிரஸ் தளத்தில் இருந்து வசதிக்காக பிளாக்கருக்கு முதன் முறையாக மாறினேன். 2009 மார்ச் முதல் என்னுடைய இந்த எழுத்தூழியம் இந்த பிளாக்கர் வழியாகவே செய்யப்பட்டு வருகிறது. இனிமேலும் கர்த்தருக்கு சித்தமானால் பிளாக்கரிலேயே என் எழுத்தூழியத்தைத் தொடர்வேன்.
இந்த எழுத்து ஊழியத்திற்கு ஆதரவும், ஊக்கமும் கொடுத்த அன்பு சகோதரர்கள் பிரபு, ரமேஸ்பாபு, பிரதீப், அகமது முகமது (அல்லாஹ்6666), கோவை அண்ணா(வெங்கடேஷ் அண்ணா), ரமேஸ் பிஸ் அண்ணா, அற்புதராஜ், ராபின், செல்வராஜ்(தமிழ் கத்தோலிக்கன்), இலங்கை கோல்வின் அவர்கள், உமர் அண்ணா, ஆகியோரை இந்த நல்ல தருணத்தில் நினைவு கூறுகிறேன். அத்தகைய நண்பர்களைக் கொடுத்த சர்வவல்ல தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
முதல் வருடத்தில் 86 பதிவுகள் மற்றும், வெரும் 700 பார்வையாளர்களுடன் இருந்த இந்த வலைமலருக்கு இரண்டாம் வருடத்தில் 160 பதிவுகளுடன் 6000 பார்வைபாளகளைக் கூட்டி வந்து உதவிய திரட்டிகள் தமிழ் மணம், தமிழ்வெளி, நியூஸ் பண்ணை, தமிழிஷ், தமிழ்10, ஈ தமிழ் திரட்டிகளையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
வரும் (மே 2010) 18 தேதியிலிருந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த எழுத்து ஊழியத்திற்காக ஜெபித்துக் கொள்ள உங்களை அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
"ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.(எபிரெயர் 5:4)" என்ற தேவனுடைய வார்த்தையின் படி என்னைப் போன்ற பாவியையும், சர்வவல்லவரும், மகாபரிசுத்தருமான, என் இரட்சகர் அருள் நாதர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி எடுத்துச் சொல்லும் ஊழியனாக என்னையும் தெரிந்து கொண்டதற்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.
சகல துதியும் கணமும் எல்லாம் சர்வ வல்லவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே செலுத்துகிறேன். ஆமேன்
12 Comments
வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததற்கும் மென்மேலும் உங்கள் பணி தொடரவும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பான வாழ்த்துக்கள்.
ReplyDeleteசமயம் இருந்தால் கீழ் உள்ள வலைத் தளங்களைப் பார்க்கவும்
http://www.cfcindia.com/tamil/
http://unmaikiristhavam.blogspot.com
மிக்க நன்றி சகோதரரே உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, தாங்கள் கொடுத்திருந்த தொடுப்புகள் மிகவும் பிரயோஜனமாக இருந்தது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும், ஆசீர்வதித்துக் காத்துக்கொள்வாராக,... ஆமேன்
ReplyDeletedear bro.Rajkumar
ReplyDeleteiam really surprised to hear that you are saved just three years ago praise the lord.May God bless you and give wisdom to this writting ministry.
sarav
நன்றி சகோதரரே, ஒரு சிறு சந்தேகம் தாங்கள் தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்தில் வரும் சரவ் அவர்களா?
ReplyDeleteஅன்பு நணபர் ராஜ்குமார்
ReplyDeleteகடந்த இரு ஆண்டுகளில் உங்கள் தளத்தின் முன்னற்றம் அருமை. உஙகள் ஆக்கஙகளும் பிரயோஜனம் மிக்கவை. சர்வ வல்ல தேவன் உங்கள் கூடவே இருந்து தனது மகிமைக்காக இத்தளத்தை உபயோகிப்பார்.
ஒரு சிறுகுறை உமர்அண்ணாவினை போன்று Index செய்து ஆக்கங்களை இட்டால் இன்னும் அதிகம் பிரயோஜனமுடையதாக இருக்கும். நன்றியுமன் என்னை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி
என்றும் அன்புடன்
கொல்வின்
இலங்கை
ஆமாம் பிரதர் நான் அதே சரவ் தான்
ReplyDelete**//ஆமாம் பிரதர் நான் அதே சரவ் தான்//**
ReplyDeleteஓ சரவ் அண்ணா உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி உங்கள் கருத்துக்களையும், சாட்சிகளையும்(கேள்வி சங்கிலி) தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்தில் படித்திருக்கிறேன். அவைகள் கருத்தாழம் மிக்கவைகள். என்னுடைய வலைமலருக்கும் வந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதித்துக் காத்துக்கொள்வாராக ஆமென்
அன்பு நணபர் ராஜ்குமார்
ReplyDeleteகடந்த இரு ஆண்டுகளில் உங்கள் தளத்தின் முன்னற்றம் அருமை. உஙகள் ஆக்கஙகளும் பிரயோஜனம் மிக்கவை. சர்வ வல்ல தேவன் உங்கள் கூடவே இருந்து தனது மகிமைக்காக இத்தளத்தை உபயோகிப்பார்.
உங்கள் ஊக்கத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரர் அவர்களே..
ஒரு சிறுகுறை உமர்அண்ணாவினை போன்று Index செய்து ஆக்கங்களை இட்டால் இன்னும் அதிகம் பிரயோஜனமுடையதாக இருக்கும்.
சகோதரரே நான் இட்டிருக்கிறேன், Side Bar-ல் இட பற்றாக்குறை காரணமாக மேலே Nav Bar- ல் Drop down menu வடிவில் இனைத்திருக்கிறேன். ஒருவேளை இந்த முறை பார்வையாளருக்கு கடினமாக இருக்கும் என்று கருதுவீர்களானால் தயவு செய்து சொல்லுங்கள் நண்பரே, நான் மாற்றி அமைத்து விடுகிறேன். இது குறித்த் ஆலோசனைகளை தங்களிடம் எதிர்பார்க்கிறேன் நன்றி
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதித்துக் காத்துக்கொள்வாராக ஆமென்
பிரதர் தங்கள் அன்பான விசாரிப்புக்கு நன்றி. உங்களக்கு ஆலோசனை மற்றும் உதவ நம் தமிழ்கிருத்தவ தளத்தின் சகோதரர்கள் இருப்பதை நினைத்து சந்தோசம் கொள்கிறேன்.மேலும் உங்கள் எழுத்து பனி தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteThanks Anna...,
ReplyDeleteஉங்கள் எழுத்துப் பணி தொடரவும் வாழ்த்துகிறேன்.
மூன்றாம் ஆண்டில் பிரவேசித்திருக்கும் நண்பர் ராஜ்குமார் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் வாழ்த்துக்கள். அர்ப்பமான நாளை யார் அசட்டைபண்ணக்கூடும். ஆம் உங்களின் தளம் ஒவ்வொருநாளூம் வளர்ந்து அநேகருக்கு ஆசிர்வாதமாக இருப்பதை நினைத்து மனதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து இந்த தமிழ் வலைதள உலகில் ஆண்டவருக்கு தொடர்ந்து மணம் வீசி மகிழ்விக்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteஇரமேஷ்.பி.எஸ்
மிக்க நன்றி P.S, அண்ணா உங்களை இங்கே சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி
ReplyDelete