Header Ads Widget

Responsive Advertisement

மனிதன் எதற்காக படைக்கப்பட்டான்?


அன்பானவர்களே, படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத்தொடரில் இதுவரை கடவுள் யார்? அவர் எங்கே இருக்கிறார்? பிசாசு யார்? பூமியில் டினோசர்கள் போன்ற விலங்குகள் அழிக்கப்பட்டது எப்படி? மீண்டும் பூமி புதிதாக உருவாக்கப்பட்டது எப்படி? என்பவைகளைக்குறித்து பைபிள் அடிப்படையில் சுருக்கமாக அறிவியல் ஆதாரங்களோடு பார்த்தோம்.இனி இந்த பூமியில் மனிதன் எதற்காக உருவாக்கப்பட்டான் என்று அறிந்து கொள்வோம்.
மனிதன் பிசாசை வெட்கப்படுத்த கடவுளால் உண்டாக்கப்பட்டான். என்ன இவன் ஏதோ முட்டாள் தனமாக உளறுகிறான் என்று நினைத்து விடாதீர்கள் கொஞ்சம் பொறுமையாக மேலே படியுங்கள் உங்களுக்கே தெளிவாகப் புரியும்.
பிசாசு பரமண்டலங்களில் இசைவாசித்து தேவனைத் துதிக்கும் கேரூபாக இருந்தான், அவன் உண்ணதத்தின் தேவனுக்கு நிகராக தன்னை உயர்த்திக் கொள்ள நினைத்த போது பூமியில் விழத் தள்ளப்பட்டான் என்பதை நாம் ஏற்கெனவே இந்தக் கட்டுரைத் தொடரில் பார்த்திருக்கிறோம். அப்படி அவன் விழுந்த இந்த பூமியிலிருந்து அவனைவிட வலிமையிலும், அறிவிலும், வல்லமையிலும் குறைந்தவர்களாக மனிதனை தேவன் உண்டாக்கி விழுந்துபோன சாத்தானின் இடத்தை மனிதனைக் கொண்டு நிறப்ப தேவன் திட்டமிட்டுள்ளார். அந்த இடமே பரலோகம் ஆகும், அங்கே செல்லும் மனிதர்கள் தேவனுடைய பிரசண்ணத்தில் இடைவிடாமல் இருந்து லூசிபர் என்ற கேரூப் செய்த பணியான இடைவிடாமல் தேவனைத் துதிப்பதற்காகவே மனிதன் உருவாக்கப்பட்டான்.
ஆனால் தன்னுடைய பாவத்தால் தேவ பிரசன்னத்திலிருந்து தள்ளப்பட்ட பிசாசு, பூமியில் தேவனுடைய திட்டத்தை நிறைவேற விடாமல் தடுக்கும் வேலையை அவனும் அவனுடைய தூதர்களும் இடைவிடாமல் செய்துகொண்டே இருக்கிறார்கள், அப்படியானால் சாத்தானின் சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல், சாத்தானை வெட்கப்படுத்தி நீதியிலும் அன்பிலும் நிலைத்திருக்கும் மனிதன் மட்டுமே தேவனுடைய பிரசன்னத்திற்கு கடந்து போக முடியும்.
பிசாசை எப்படி வெட்கப்படுத்த முடியும்?
அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம், ஆகிய நல்ல பன்புகளை கடைபிடிக்கும் போது பிசாசை வெட்கப்படுத்த முடியும், என்று எளிமையாகச் சொல்லிவிட முடியாது, இன்னும் சில காரியங்கள் இருக்கின்றன அதை அறிந்து கொள்ளும் முன் சாத்தானால் தூண்டப்பட்டு செய்யப்படும் காரியங்களை தெரிந்து கொள்வோம், அவை விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள், ஆகியவைகள் ஆகும் இத்தகைய குணநலன்களை நாம் எப்படி வெறுப்பது? இதனால் உண்டாகும் தீங்குகள் என்ன? என்பதையும் மனித ஆத்துமாவைப் பற்றியும் சாத்தானின் தந்திரங்கள், அவன் எப்படி ஒருமனிதனை எளிதில் நெருங்க முடியும், பிசாசின் சூழ்ச்சியில் சிக்கிக்கொண்ட மனிதனின் முடிவு என்ன? அதிலிருந்து எப்படித் தப்பிக் கொள்வது ஆகியற்றை அடுத்து வரும் பதிவுகளில் அறிந்து கொள்வோம் காத்திருங்கள்....


Post a Comment

0 Comments