Header Ads Widget

Responsive Advertisement

மண்னை திண்பாய் பாம்பிற்கு கடவுளின் சாபம்

அன்பானவர்களே, 
நாம் பைபிளின் ஆதியாகமம் 3:14 ஆம் வசனத்தில் வாசிக்கும் போது கடவுள் பாம்புக்கு மண்ணை திண்பாய் என்று சாபம் விட்டதாகக் காண்கிறோம் அனேகர் இது எப்படி ஆகும்? இப்போதிருக்கும் பாம்புகள் மண்ணையா உண்கிறது என்று கேள்வி உங்களில் அனேகருக்கு கேள்விகள் உண்டாயிருக்கும். சிலர் இது சரியான கட்டுக்கதை என்றும் சொல்லிக்கொண்டு இருக்கலாம் ஆனால் இது முழுக்க முழுக்க உண்மையென்று நான் சொன்னால் நீங்கள் நம்பத்தயாரா? 

இந்த வசனம் நேரடியான பொருள் கொண்டது அல்ல, மாறாக உவமானப் பொருளை உடையது. அதாவது ஆதியாகமத்தில் 2ம் அதிகாரம் 7ம் வசனத்தைப் பார்க்கும் போது மனிதனை மன்னால் உருவாக்கியதாகக் காண்கிறோம், அதே போல சகல நாட்டு மிருகங்களையும் மன்னினாலே உண்டாக்கியதாகக் காண்கிறோம்,  

சரி இப்போது விசயத்திற்கு வருவோம், ஏற்கனவே இந்த வசனம் உவமான அடிப்படையிலான பொருள் கொண்டது என்று கண்டோம், அப்படியானால் பாம்பு என்று உருவகப்படுத்தப்படுவது பிசாசு ஆகும் ஆதாரம் வெளி 12:9 இந்த வசனத்தில் அந்த பாம்பு உலகமனைத்தையும் மோசம் போக்கிய பிசாசாகிய பாம்பு என்று மிகத்தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

அடுத்து பாம்பு மன்னைத் தின்குமா? என்ற உங்கள் சந்தேகத்திற்கு அந்த வசனத்தில் மண் என்பதும் உவமானம் தான் எப்படி எனில் இங்கே கடவுள் தன்னால் தெரிந்து கொள்ளப்படாத மக்களைக் குறித்துச் சொல்லுகிறார். அதாவது மனிதன் மன்னால் உண்டாக்கப்பட்டான் என்று ஏற்கெனவே பார்த்தோம், அப்படி உருவாக்கப்பட்ட மனிதர்களில் சிலர் இந்த பழைய பாம்பு என்று உவமைப்படுத்தப்பட்ட பிசாசின் தந்திரங்களில் ஏமாந்து கொலை, கற்பழிப்பு, திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டு அவமானங்களையும் தண்டனைகளையும் அடைகிறார்கள். 

இப்படி கடவுளால் தெரிந்து கொள்ளப்படாத மக்களை பிசாசு ஆண்டுகொள்ள கடவுள் அவனுக்கு அதிகாரம் கொடுத்ததையே இந்த வசனத்தின் மூலம் அறிந்து கொள்கிறோம்...


பிசாசு எப்படி மண்னைத்திண்றான்?http://www.bibleuncle.co.cc/2000/02/01.html

இதைக்குறித்து இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத்தொடரை தொடர்ந்து படித்து வாருங்கள்

Post a Comment

5 Comments

  1. //வசனத்தில் வாசிக்கும் போது கடவுள் மனிதனுக்கு மண்ணை திண்பாய் என்று சாபம் விட்டதாகக் காண்கிறோம்//

    மனிதன் இல்லை பிரதர் பாம்பு என்பதே சரி. டைப்பிங் தவறு.

    ReplyDelete
  2. ஜாமக்காரனில் வந்த விளக்கம்


    கேள்வி: மண்ணைத்தின்பாய் என்று கர்த்தர் பிசாசுக்கு சாபம் இட்டாரே (ஆதி 3:14) பிசாசு இப்போது மண்ணைத்தின்கிறதா?

    பதில்: மண்ணைத்தின்பாய் என்பது ஆசீர்வாதத்தை இழந்துபோவாய் என்று அர்த்தம். மண் என்று நேரடி அர்த்தம் எடுக்கக்கூடாது. சங் 72:9ல் வாசித்துப்பாருங்கள். அவருடைய சத்துருக்கள் மண்ணை நக்குவார்கள் என்று எழுதியிருப்பது ஆசீர்வாதத்தை இழப்பதைக்குறிப்பதாகும்.

    பாலும்-தேனும் ஓடும் கானன்தேசத்துக்கு நான் உங்களை அழைத்துப்போவேன் என்று கர்த்தர் வாக்கு அருளினார். அதன்படி அந்த தேசம் முழுவதும் பாலும்-தேனும் மட்டும் நதிபோல் ஓடினால் யார் அங்கு குடியிருப்பார்கள். ஆகவே அவைகள் அந்த தேசத்தின் செழிப்பை விவரிக்க உபயோகித்த வார்த்தைகள் ஆகும். வியாதியில்லாமல் - சாப்பாட்டுக்கு குறைவில்லாமல் நான் உங்களை வாழவைப்பேன் என்று அதற்கு அர்த்தம் கொள்ளலாம்.
    http://jamakaran.com/tam/2009/august/kelvi_badhil.htm

    ReplyDelete
  3. மிக மிக அருமையான விளக்கம் இங்கே பதித்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே

    ReplyDelete
  4. */மனிதன் இல்லை பிரதர் பாம்பு என்பதே சரி. டைப்பிங் தவறு/*

    நன்றி சகோதரே மாற்றி விட்டேன், தவறுகளைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. //பாலும்-தேனும் ஓடும் கானன்தேசத்துக்கு நான் உங்களை அழைத்துப்போவேன் என்று கர்த்தர் வாக்கு அருளினார். அதன்படி அந்த தேசம் முழுவதும் பாலும்-தேனும் மட்டும் நதிபோல் ஓடினால் யார் அங்கு குடியிருப்பார்கள். ஆகவே அவைகள் அந்த தேசத்தின் செழிப்பை விவரிக்க உபயோகித்த வார்த்தைகள் ஆகும். வியாதியில்லாமல் - சாப்பாட்டுக்கு குறைவில்லாமல் நான் உங்களை வாழவைப்பேன் என்று அதற்கு அர்த்தம் கொள்ளலாம்//. good explanations. best wishes!

    ReplyDelete