Header Ads Widget

Responsive Advertisement

'சூரியன் இல்லாத போதே வெளிச்சம்' பைபிளின் கட்டுக்கதையா?

கேள்வி:பைபிளில் பூமியில் சூரியன் இல்லாத போதே வெளிச்சம் இல்லாமல் இருந்ததாகச் சொல்ல்ப்படுகின்றதே இது எப்படி சாத்தியம்? அல்லது காதில் பூ சுற்றும் செய்தியா?

இந்த கேள்விக்கு பைபிளை நன்றாகப் படித்துப் பார்த்தாலே நமக்கு உண்மை தெரிந்து விடும்.

இந்த கேள்விக்கு பதில் தேடும் முன்னால் இந்த உலகத்தைப் படைத்ததாகச் சொல்லப்படும் கடவுளைக் குறித்து பைபிள் என்ன சொல்லியிருக்கிறது என்பதை ஒரு முறை பார்த்து விடுவோம், இது இந்த கேள்விக்கான பதிலைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

கடவுள் எப்படி இருக்கிறார்?
(1) கடவுள் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை;I யோவான் 1:5
(2) கடவுள் பாவமில்லாத உலகிற்கு அவரே வெளிச்சம் என்று வெளி 21;23 வெளி 22;5 மேற்கண்ட வசனங்கள் சொல்லுகின்றன.

இப்படிப்பட்ட வெளிச்சமுள்ளவரே பூமிக்கு வெளிச்சமாக இருந்தார், கடவுள் ஏதோ திரைப்படங்களில் காட்டுவதுபோல ஒரு மனிதனின் வடிவில் இருப்பவர் அல்ல பைபிளில் ஏசாய தீர்க்கதரிசி மூலம் கடவுள் சொல்லியிருப்பதாவது:
ஏசாயா 66:1: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது? என்று கேட்கிறார்.

இங்கே வானம் என்பதை நாம் எது என்பதை அறிந்து கொள்வோம், நம் அனைவருக்கும் வானம் என்பது முடிவற்ற அன்டவெளி என்பது தெரியும். அதன் எல்லைகள் இன்றுவரை எங்கே என்பது அறியப்படவில்லை, மேலும் அங்கே எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன என்பதும் அறியமுடியவில்லை. இவைகளை உண்டாக்கியவரும் அவற்றை பேர் சொல்லி அழைப்பவரும் கடவுள் என்று பைபிள் சொல்லுகிறது(ஆதியாகமம் 1:16),

சமீபத்தில் ஒரு பிரஞ்சு அறிவியல் அறிஞர் சந்திரனில் ஒரு சதுர மீட்டருக்கு கண்ணாடித் தகடுகளைப் பதித்தால் அது பூமியில் 3000 முதல் 3500 கி,மீ வரைக்கும் இரவிலே சூரிய ஒளியைப் பெறலாம் என்று கண்டரிந்திருக்கிறார்,

அப்படியானால் அளவிடமுடியாத அளவில் இருக்கும் கடவுளின் வெளிச்சம் சூரியனைப் போல நிழலைக் கூட உண்டாக்கது அல்லவா?

பைபிள் இதற்கு இன்னும் ஒருபடி மேலே போய் நாம் கடவுளுக்கு உள்ளாக நாம் வசிக்கிறோம் என்றும் சொல்லுகிறது (அப்போஸ்தலர் 17:28), அப்படியானால் சூரியனுக்கு முன்னால் வெளிச்சம் உள்ளது என்று அறியமுடிகிறது அல்லவா?

படைப்பைக் குறித்த‌ மேலும் அதிக தகவல்களுக்கு: clikhere

விரைவில் அடுத்த கேள்வியோடு சந்திக்கிறேன்.

Post a Comment

1 Comments