உருகாயோ நெஞ்சமே
குருசினில் அந்தோபார்கரங்கால்கள் ஆணியேறித்
திருமேனி நையுதே
மன்னுயிர்க்காய் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனார்
இந்நில மெல்லாம் புரக்க
ஈனக்குரு சேறினார்!
தாகம் மிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே
ஏகபரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்!
வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்!
புல்லரிதோ நன்றி கெட்டு
புறம்பாக்கினாரன்றோ!
0 Comments