Header Ads Widget

Responsive Advertisement

ஒலிவடிவ வேதாகமம் Mp3 - மாற்கு tamil audio bible mp3 - Mark ( online streaming)





மாற்கு நூல் அறிமுகம்,

ஆசிரியரைப் பற்றி
வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டு நூலில் முதன்முதலாக எழுதப்பட்டது மாற்கு நூல் ஆகும், புதிய ஏற்பாட்டு நூல்கள் அனைத்திலும் எழுதியவர்களின் பெயர் இடம்பெறவில்லை, மாறாக சபை முற்பிதாக்கள் கி.பி327 ஆம் ஆண்டு புதிய ஏற்பாட்டு நூல்களைத் தொகுக்கும் காலம் வரையிலும் சுமார் 300 ஆண்டுகள் வாய்வழித் தகவல்களாக நூலாசிரியர்களைக் குறித்து தெரிவித்து வந்தார்கள் இந்த நூலின் பெரும்பகுதியை எழுதியவர் மாற்கு என்கிற யோவான் ஆவார், இவரைக் குறித்து வேதாகமத்தில் அப்போஸ்தலர் 12;12, 12;25, 13;13 கொலே 4;10 ஆகிய இடங்களில் வாசிக்கலாம், பர்ணபா என்பவரின் ஒன்றுவிட்ட சகோதரன் மாற்கு ஆவார். மேலும் இயேசு கிறிஸ்துவின் பிரதான சீஷராகிய பேதுரு மாற்குவை தன்னுடைய மகனைப் போன்றவர்(1பேதுரு 5:13) என்று குறிப்பிடுகிறார். பவுல் இவரை ஊழியத்தில் மிகவும் பயனுள்ளவர் (2திமோ 4:11)என்று குறிப்பிடுகிறார்.

மாற்கு நூல் எழுதப்பட்ட நோக்கம்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாட்களில் அவரைக் குறித்து எழுதிவைக்க வேண்டும் என்று யாருக்கும் தோண்றவில்லை, காரணம் அவர் மீண்டும் உடனே வந்துவிடுவார் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள், ஆனாலும் ஆண்டவருடைய வருகை தாமதமானது. அவரைக் கண்ணாரக் கண்டவர்கள் மூப்பினாலும், அவரோடு கூட இருந்த அப்போஸ்தலர்கள் மற்றும் ஆதித் திருச்சபை முற்பிதாக்கள் கொல்லப்பட்டார்கள், இதனால் இயேசுவைப் பார்த்து அறியாத புதிய சந்ததிக்கு அவரைக்குறித்து எழுதி வைக்கவேண்டியது மிகவும் அவசியமாக இருந்தது.

எழுதப்பட்ட காலம் மற்றும் சூழ்னிலை
ஆதித்திருச்சபை நாட்களில் சபைகள் மிகுந்த உபத்திரவத்தில் இருந்தன. ஆனாலும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவரை நேரடியாத பார்த்தறியாத புதிய தலைமுறை சீடர்களுக்கு சொல்லவேண்டியது அவசியமானதால், வெறும் கிறிஸ்து நிகழ்வை மாத்திரம் பதிவு செய்து இந்த நூல் எழுதப்பட்டது. இந்த நூலில் சிலுவை நிகழ்வு மட்டும் கிட்டத்தட்ட 60% சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த நூல் பிரதார சீடர் பேதுரு சொல்லச் சொல்ல மாற்கு எழுதியதாக வரலாற்று ஆசிரியர் கூறுவர். இந்த நூல் எழுதப்பட்ட இடம் ரோமாபுரி ஆகும், மாற்கு ரோமாபுரியில் யூதரல்லாத கிறிஸ்தவர்களுடைய சபையில் மூப்பராக இருந்தார்,

மாற்கு நூலை எழுதியவர்கள்
மாற்கு நூலின் 16 ஆம் அதிகாரம் 8 ஆம் வசனம் வரைக்கும் எழுதியவர் மாற்கு என்கிற யோவான் ஆவார் இந்தப்பகுதி UR MARK ‍ என்று சொல்லப்படும், மாற்கு இந்த நூலை எழுதி முடிக்குமுன்னாலேயே பேதுரு கொல்லப்பட்டார். இதன் மீதிப்பகுதியான 16 ஆம் அதிகாரம் 9 ஆம் வசனம் முதல் 20 வசனம் வரையுள்ள 11 வசனங்கள் மாற்கு திருச்சபையைச் சேர்ந்த மூப்பர்கள் எழுதினார்கள், அந்தப் பகுதிமட்டும் CHRUCHEN MARK ‍ என்று அழைக்கப்படும், இந்த மாற்கு நூலானது மற்ற திருச்சபைக்கும் அனுப்பட்டு வாசிக்கப்பட்டது

எழுதப்பட்ட காலம்
இந்த நூல் கி.பி 64 லிருந்து 67 அல்லது 70க்குள் எழுதப்பட்டது. என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள், காரணம் மாற்கு 13 அதிகாரம் எருசலேம் தேவாலயத்தின் அழிவைப் பற்றி விவரிக்கிறது.

நூல் அமைப்பு:
மாற்கு நூல் இரண்டு பிரிவாக பிரித்துப் படிக்கலாம்
முதல் பிரிவு 1 ஆம் அதிகாரம் துவக்கி 8 ஆம் அதிகாரம் வரை இந்த முதல் பிரிவில் பாலஸ்தீனாவில் கலிலேயா பகுதியில் நடக்கும் சம்பவங்கள் மட்டும் சொல்லப்படுகிறது. இது இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் முதல் கட்டமாகும்.

மாற்கு நூலின் இரண்டாம் பிரிவு 9 ஆம் அதிகாரம் துவக்கி 16 ஆம் அதிகாரம்வரையுள்ள பகுதிகளாகும், இது கலிலேயா தவிர்த்து மற்ற பகுதிகளில் இயேசு செய்த ஊழியங்களைப் பற்றி விவரிக்கிறது.

மாற்குவில் உள்ள முக்கிய அம்சங்கள்
இந்த நூலில் 8, 9, 10, ஆகிய அதிகாரங்களில் மேசியாவைப் பற்றிய இயேசு கிறிஸ்துவின் நேரடி போதனைகள் இடம் பெற்றுள்ளன,

இதில் 8;31, 9:31, 10;33 ஆகிய வசனங்கள் PASSION PREDICTION ‍ அதாவது இயேசு மேசியாவின் சாவை முன்னறிவிக்கும் வசனங்களாகும்,

அதோடு மட்டுமல்லாமல் சீஷத்துவத்தைக் குறித்த இயேசுவின் உபதேங்களும் அந்த இந்த மூன்று வசனங்களில் உள்ளன.

மாற்கு நூலின் மையக்கரு 8, 9, 10 ஆகிய அதிகாரங்களில் அமைந்திருக்கிறது.


மாற்கு நூல் எழுதப்பட்ட காலச் சூழ்நிலையிலிருந்து மாற்கு நூலைப் பற்றிய முற்றிலும் முற்றிலும் மாறுபட்ட நோக்கு

மாற்கு நூல் ரோம சாம்ராஜ்ஜியம் செல்வாக்கு பெற்றிருந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது ஆகும், ரோமப் பேரரசில் அரசன் கடவுளின் மகன் என்று போற்றப்படுவான், ரோம நாணையங்களிலும் அவ்வாறே எழுதப்பட்டிருக்கும், இந்த சூழ்நிலையில் மாற்கு இந்த நூலில் இயேசுவை கடவுளுடைய குமாரன் என்று ஆணித்தரமாக எழுதியிருக்கிறார்.

அதிலும் மாற்கு இயேசுவை தேவனுடைய குமாரன் என்று நான்கு வெவ்வேறு இடங்களில் மாறுபட்டவர்கள் இயேசுவை இவ்வாறு குறிப்பிடுகிறார்கள் முதலாவது தீய ஆவிகள் அவரை தேவனுடைய குமாரன் என்று சொல்லுகின்றன(மாற்கு 3:11), அடுத்ததாகவும் பிசாசுகள் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று குறிப்பிடுகின்றன(மாற்கு 5:7), மூன்றாவதாக பிரதான ஆசாரியன் அவரை விசாரிக்கும் போதும் இயேசுவிடம் நேரடியாக நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவா என்று கேட்டான். முதல் இரண்டு முறைகள் பிசாசுகளை அப்படிச்சொல்லவேண்டாம் என்று அதட்டியவர், மூன்றாம் முறை "நீர் அப்படிச் சொல்லுகிறீர்" என்று பிரதான ஆசாரியனிடத்தில் கூறுகிறார்.

இயேசு தேவனுடைய குமாரனே நூற்றுக்கதிபதியின் வாயின் வழியாக மாற்கு..
நான்காம் முறையாக இயேசு சிலுவையில் உலகத்தின் பார்வையில் தோற்றுப்போன மனிதனாக நிர்வானமாக சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார், அந்தச் சூழ்நிலையில், ரோம அரசாங்கத்திடமிருந்து ரோம அரசரின் பெயரோடு அவரே கடவுளின் மகன் என்று பொறிக்கப்பட நாணையங்களில் தன் சம்பளத்தைப் பெறும் நூற்றுக்கதிபதி என்ற மனிதன். அவரை நேரடியாக சிலுவையில் பார்த்து மனமுறுகி, ச்சீ ரோம அரசனா கடவுளுடைய குமாரன் இல்லை இல்லை இதோ இந்த தோற்றுப் போய் நிராயுதபானியாய் சிலுவையிலே தொங்கிக்கொண்டிருக்கிற இந்த இயேசுவே மெய்யான தேவனுடைய குமாரன் என்று அறிவிக்கிறார்,

அந்த நாட்களில் இயேசுவை தேவனுடைய குமாரன் என்பது இத்தனை ஆணித்தரமாக சொல்வதற்கும், எழுதுவதற்கும் தனி தைரியம் இருந்திருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள், அதோடு மட்டுமல்லாமல் மாற்கு நூலின் துவக்கத்தில் இயேசு கிறிஸ்துவின் பெயரைக் குறிப்பிடும்போதும் மாற்கு தேவக்குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்று சொல்லி ஆரம்பிப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்,. இந்த தைரியம் தான் இன்று நமக்கு வேண்டும் பிரியமானவர்களே, உயிருக்கு பயமில்லாமல்., கொடூர மரணங்களை இந்த அரசாங்கம் நமக்குக் கொடுத்தாலும் பரவாயில்லை இயேசுவே மெய்யான தேவனுடைய குமாரன் என்று மாற்கு எழுதிய அந்தச் சூழ்நிலையின் காலகட்டத்திலிருந்து நாம் பாடம் படிக்க வேண்டும்.


FORMULA OF MARK GOSPEL
S/O GOD = மேசியா(எபிரேயச் சொல்) = கிறிஸ்து(கிரேக்கச் சொல்) இந்த மூன்றின் பொருளும் ஒன்றே, இதில் அரசியல் சார் பொருளான மேசியா(இறைவனால் வாக்களிக்கப்பட்ட ராஜா) என்பதையும், கிறிஸ்து(தேவனால் அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்ற யூத சமயம் சார் பொருளையும் ஒருசேர மாற்கு தன்னுடைய நற்செய்தியில் இயேசுவே இறைமகன் என்று ஆணித்தரமாக நிரூபித்திருப்பது மாற்கு சுவிஷேசகனின் FORMULA ‍ ஆகும்.

மாற்கு சுவிஷேசத்தின் சிறப்பு
மாற்கு சுவிஷேசத்தின் கதாநாயகர் இயேசு கிறிஸ்து என்பது நமக்கு நன்றாகத் தெரியும் ஆனால் உள்ளதை உள்ளதென்று சொல்லும் எதார்த்த நடக்கு உதாரணமாக மாற்கு 6;5 வசனத்தில் இயேசுவால் குணமாக்க முடியவில்லை என்று மாற்கு உள்ளபடியே பதிவு செய்கிறார், இத்தனை வெளிப்படையாக மாற்கு எழுதியிருப்பது அந்த நூலின் நம்பகத் தன்மைக்கு அச்சாணியாக இருக்கிறது

ஆதித்திருச்சபை மற்றும் நமக்கும் மாற்கு சொல்லிய அறிவுரை
ரோமாபுரியில் மாற்கு சுவிஷேசம் எழுதி முடிக்கப்படும் முன்னரே பவுலும், பேதுருவும் கொல்லப்பட்டார்கள், மேலும் ரோம சாம்ராஜ்ஜியத்தில் தான் தண்டனைகள் சித்தரவதைக் கொலைகள் அதிகமாக இருந்தது. ஆகவே துன்ப்படுகிறாய் என்றா கவலைப்படுகிறாய்? உன் கடவுளாகிய இயேசு கிறிஸ்துவே துன்பப்பட்டாரே, அவரைப் பற்றிக்கொண்டு நீயும் "துன்பப்படு" என்பது மாற்கு நற்செய்தி ஆசிரியர் ஆதித்திருச்சபைக்கும், இன்றைய திருச்சபைக்கும் இன்றைய திருச்சபைகளுக்கும் மாற்கு சொன்ன அறிவுரை "துன்பப்படு" என்பதாகும். இந்தச் செய்தி அன்றைய நாட்களி மாற்கு 15:34 வசனத்தில் உள்ள "ஏன் என்னைக் கைவிட்டீர்" என்ற வசனம் ரோமா புரியிலிருந்த மாற்கு திருசபையின் கதறலாகவே பார்க்கப்பட்டு வந்தது.

இத்தனை துன்பங்களுக்கும், சித்திரவதைகளுக்கும், நடுவே எழுதி முடிக்கப்படும் முன்னதாகவே கொல்லப்பட்ட உயிருக்கு பயந்த சூழ்நிலையிலிருந்து எழுதப்பட்ட நூலான மாற்கு நூல் இன்று நம்முடைய வேதாகமத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. கிறிஸ்துவைப் பற்றி இறப்புக்கு முன்னால் சொல்லிவிட வேண்டும் என்று அவசர அவசரமாக எழுதிவைக்கப்பட்ட அந்த ஆவணம், அந்த நாட்களில் ரோம அரசன் கடவுளுடைய மகன் அல்ல, யூதர்கள் காத்திருந்த வாக்களிக்கப்பட்ட மேசியாவும் உண்மையான கடவுளுடைய மகனும் இந்த இயேசு கிறிஸ்துதான் என்பதை நமக்கு சொல்லியிறாவிட்டால் நாம் பரிதபிக்கப்பட்டவர்களாயிருப்போம். இன்று நாம் உயிருக்கு பயந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை, நாம் இயேசுவைக் குறித்து அறிவிக்க இதைவிட நல்ல சூழ்நிலை கிடைக்காது, நாம் சொல்லாதினால் எத்தனைபேர் வஞ்சிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்? மாற்குவைப் போல இயேசுவைக் குறித்து சொல்லுவோம். தேவனுடைய நாமம் மகிமையடையட்டும் ஆமென்

Post a Comment

0 Comments